fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்தியாவின் தலையை வெட்டி விட்டீர்கள்.. குலாம்நபி ஆசாத் ஆவேசம்

modi-gulam-nabi-azad

Politics | அரசியல்

இந்தியாவின் தலையை வெட்டி விட்டீர்கள்.. குலாம்நபி ஆசாத் ஆவேசம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகையை (370வது பிரிவு) ரத்து செய்து அந்த மாநிலத்தில் இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவித்து அதற்கான சட்ட மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டபோது அது குறித்து காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத் பேசுகையில்,

காஷ்மீர் குறித்து உள்துறை அமைச்சர் பேசியபோது, சபையில் அணுகுண்டு வெடித்தது போலிருந்தது. இந்தியாவின் கிரீடமாக, தலையாக காஷ்மீர் இருந்தது. அந்த தலையை வெட்டுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், வெட்டி விட்டார்கள்.

இந்த அறிவிப்பின் மூலம், இந்திய வரைபடத்தில் இருந்து காஷ்மீர் நீக்கப்பட்டுவிட்டது. அதன் அடையாளம் அழிக்கப்பட்டு விட்டது. அதை வெறும் யூனியன் பிரதேசமாக மாற்றி விட்டார்கள். துணைநிலை ஆளுநர் மூலம் நிர்வகிக்க விரும்புகிறார்கள்.

காஷ்மீர் மக்கள், இந்திய ராணுவத்தின் பக்கமே இருந்தனர். ஒரே மதமாக இருந்தபோதிலும், பாகிஸ்தானை தவிர்த்தனர். அதற்கு பதிலாக இந்தியாவின் மதச்சார்பின்மையை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், இன்று நீங்கள் மீண்டும் பிரிவினைக்கு அடித்தளம் அமைத்து இருக்கிறீர்கள். மசோதாக்கள் மூலமாக ஒருங்கிணைப்பு வராது. இதயம் மூலமாகவே வரும். இந்த மசோதா நிறைவேறும்போது, அது இந்திய வரலாற்றில் கரும்புள்ளியாக அமையும்.

நீங்கள் காஷ்மீரை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள். அதிகார போதையில் மாநிலத்தின் வரலாற்றை நசுக்கப்பார்க்கிறீர்கள். இதுபோல், குஜராத்தை யூனியன் பிரதேசமாக்க மசோதா கொண்டு வரத் தயாரா? புதிய இந்தியா என்று பேசிக்கொண்டு, பழைய இந்தியாவை உடைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

இவ்வாறு குலாம்நபி ஆசாத் பேசினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top