fbpx
Connect with us

Cinemapettai

மணமகளின் தாயை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தந்தை.. காதலர் தினத்தில் திரும்பி வந்த சோகம்

India | இந்தியா

மணமகளின் தாயை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தந்தை.. காதலர் தினத்தில் திரும்பி வந்த சோகம்

மணமகளின் தாயை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தந்தை என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாம் அனைவரும் ஒரு செய்தியை பார்த்திருப்போம். அந்த ஜோடி இப்போது சொந்த ஊருக்கே சோகத்துடன் திரும்பிவிட்டதாம்.

குஜராத் மாநிலம் சூரத் நகரையே அதிர வைத்த விசித்திர காதல் ஜோடியின் கதையை கேட்டு ஊரே காரி துப்பியதால் மனமுடைந்த அவர்கள் திரும்பிவிட்டார்கள். ஆனால் வீட்டில் யாரும் பேசுவதில்லையாம் அவர்களுடன்.

சூரத்தில் 48 வயதான ராஜா(பெயர் மாற்றம்) தனது மகனுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தார். அந்தப் பெண்ணின் தாயார் ராணி ( பெயர் மாற்றம்) மாப்பிள்ளையின் அப்பாவோட சிறு வயது காதலி என்பது தான் இதில் டுவிட்ஸ்டே.

இளம் வயதில் இவர்களது காதலுக்கு இரு வீடுகளிலும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் வேறு நபர்களுடன் திருமணமும் நடந்தது. இருந்தாலும் இரண்டும் மனசார பிரியவில்லை. இருவரும் பழைய நினைவுகளை அவ்வப்போது ஆசைபோட்டு கொண்டு வளர்த்துக் கொண்டே இருந்தனர்.

இந்த நிலையில்தான் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயம் செய்தனர். இந்த சமயத்தில் பழைய காதல் வந்து மனசில் ரெக்க கட்டி பறக்க, இருவரும் கல்யாணத்துக்கு முன்னாடி ஓடிப் போய் விட்டார்கள், இரு குடும்பமும் அதிர்ந்து போனது.

நிலை குலைந்து போன குடும்பத்தினர் கல்யாணத்தை ரத்து செய்தனர். இரு குடும்பங்களும் நிம்மதியில்லாமல், அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் கிடக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஜோடி தற்போது சத்தம் இல்லாமல் வீடுகளுக்குத் திரும்பி விட்டாரகள், இரு குடும்பத்தினரும் இவர்களிடம் கடும் கோபத்தில் உள்ளார்கள். தன் தாய் இப்படி செய்ததை எண்ணி அவரது பெண்தான் மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருக்கிறார்.

அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வர உறவினர்கள் முயல்கிறார்களாம். ஆனால் கணவர் தன்னை நிராகரித்து விட்டதால் அவர் பெரும் வருத்தத்தில் உள்ளாராம். இந்த நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் இந்த செய்திகள் காற்றுவாக்கில் எல்லா மீடியாவிலும் போட்டு கொண்டு இருக்கிறார்கள். அந்த முதல் காதல.. எப்பவும் மறக்க முடியாது போலயே..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top