Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோலி சோடா 2: “பொதுநலத்திலும் ஒரு சுயநலம்”- வித்யாசமான ப்ரோமோஷன் ! கிளம்புது பார் GST வண்டி !
Published on
கோலி சோடா 2
2014ல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் கோலி சோடா. பசங்க திரைப்படத்தில் நடித்த 4 சிறுவர்கள் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்தனர். இந்தத் திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கினார். ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை, தானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ மூலம் தயாரித்து இயக்குகிறார். அச்சு இசை. தீபக் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 14 ரிலீசாகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் தான் சூரியன் FM உடன் சேர்ந்து ப்ரமோஷன் செய்யப்போவதாகவும், சென்னை போல உங்கள் ஊருக்கு என்ன தேவை என சொல்லுமாறு கேட்டுள்ளார் .
