அட ஜி.எஸ்.டி அமலாக்கம், திரை அரங்க கட்டண உயர்வு இதனை அடிப்படையாக கொண்டு நாங்க இதை சத்தியமா ஜி.எஸ்.டி பொங்கல் என்று சொல்லவில்லை.

ஜி.எஸ்.டி = Gulebhagavali, Sketch, Thaana serntha kottam = GST

குலேபகாவலி

Gulaebaghavali

கதை சொல்ல போறோம் பட இயக்குனர் கல்யாணின் அடுத்த படைப்பு. பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதியுடன் பெரிய காமெடி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம். புதையல் தேடி செல்லும் அக்ஷன், காமெடி, சேசிங் ஜானர்  வகையறா படம்.  குடும்பத்துடன்  திரைஅரங்கம்  சென்று வயறு வலிக்க சிரித்து விட்டு வரலாம்.

ஸ்கெட்ச்

sketch

வாலு பட இயக்குனர் விஜய் சந்திரன் அடுத்த ப்ரொஜெக்ட். வட சென்னை பின்புலம். சேது படத்தில் இருப்பதில் 4 நண்பர்கள் விக்ரமுடன். இவர்கள் வேலை லோன் கட்டாதவர்களின் வண்டியை பறிமுதல் செய்வது. அய்யர் வீட்டு கல்லூரி மாணவியாக தமன்னா. பல பழைய விஷயங்களின் கலவை தான் இப்படம். ஜெமினி, தூள் அளவுக்கு மாஸ் படம் இல்லை என்றாலும், படம் ஓகே என்று சொல்லும் ரகம். ரேணிகுண்டா, நான் மஹான் அல்ல படங்களில் பார்த்த அதே மெசேஜ் தான் மையக்கரு.

தானா சேர்ந்த கூட்டம்

thaana serntha

ஸ்பெஷல் 26 என்ற பிரபல பாலிவுட் படத்தின் தழுவல். இப்படத்தை விக்னேஷ் சிவன் தன் பாணியில் எடுத்துள்ளார். படித்த பட்டதாரி வாலிபர்கள், லஞ்சம் கொடுக்க இயலாமல் வெளியின்றி தவிக்கின்றனர். ராபின் ஹூட் ஸ்டைலில் அதிரடி வழியில் நூதன முறையில் திருடும் சூர்யா & டீம். முழுவதுமாக காமெடி படமா அல்லது சீரியஸ் படமா என்ற குழப்பத்தில் நம்மை கொண்டு சென்று விடுகின்றனர். விக்னேஷ் சிவனிடம் இருந்து நாம் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம், ஆனால் அவர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் படம் பொங்கலுக்கு நல்ல விருந்து தான்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

இந்த மூவரில் துளியும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பிரபுதேவா தான் முன்னிலை வகிக்கிறார் என்பது தான் உண்மை. இருப்பினும் மூன்று படங்கள், மூன்று ஜானர் ஆகமொத்தத்தில் இது அசத்தலான ஜி.எஸ்.டி பொங்கல்  தான்.