ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று ஜிசாட் -9 செயற்கை கோள் சற்று நேரத்திற்கு முன்னர் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தெற்காசிய நாடுகளின் பருவமழை தொடர்பான மாற்றங்களை இந்த செயற்கைகோள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தியா, பூடான், நேபாளம், வங்கதேசம் இலங்கை உள்பட 6 நாடுகள் பயன்படும். தெற்காசிய நாடுகளை தவிர பாகிஸ்தானை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு இந்த செயற்கை கோள் உதவிகரமாக இருக்கும்.

தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக ரூ 450 கோடியில் இந்த செயற்கை கோளை இந்தியா உருவாக்கி உள்ளது. சுமார் 2220 கிலோ எடை கொண்டது. ஜிஎஸ்எல்வி எப் – 9 ராக்கெட் மூலம் இந்த செயற்கை கோள் ஏவப்பட்டது. சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.