பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்பட்ட நஷ்டம்.. இத வச்சு இன்னும் ஆயிரம் எபிசோட் ஓட்டு வாங்க போல

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு இயற்கையான முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாததால் அவளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்கும் சிகிச்சையை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மேற்கொண்டிருக்கிறது. இதற்காக அவர்களது சக்தியை மீதி 5 லட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கி முல்லைக்கு அந்த சிகிச்சையை செய்தனர்

இந்த சிகிச்சையின் முதல் கட்டம் வெற்றியடைந்த நிலையில், திடீரென்று முல்லைக்கு வயிற்று வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கு முல்லையை பரிசோதித்த மருத்துவர், இந்த முறை மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்கவில்லை. இனி கொஞ்ச நாள் கழித்து மீண்டும் இந்த சிகிச்சையை மறுபடியும் ஐந்து லட்சம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும் என சொன்னதை கேட்ட தனம் மற்றும் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் தூக்கிவாரிப்போட்டது.

இந்த சிகிச்சைக்கு பிறகு முல்லை எப்படியாவது கருத்தரித்து விடுவார் என எண்ணிய நிலையில், அவர்களுக்கு தற்போது ஏமாற்றம் மட்டுமே மிச்சம். அத்துடன் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த முல்லைக்கு மனவேதனையுடன் அழுதுகொண்டே இருக்கிறாள்.

இருப்பினும் மருத்துவர் இந்த முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சொன்னதால் இன்னும் கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் முல்லைக்கு இந்த சிகிச்சையை மீண்டும் செய்ய பாண்டியன் ஸ்டோர்ஸ் திட்டமிடப்பட்டது.

ஆனால் தற்போது வாங்கிய 5 லட்சம் பணத்தை இன்னும் செலுத்த முடியாமல் தவிக்கும் இவர்களுக்கு மீண்டும் 5 லட்சத்தை பிரட்டுவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். இருப்பினும் முல்லைகாக பணத்தை பொருட்டாக பார்க்காமல் எப்படியாவது முல்லையின் கையில் ஒரு குழந்தை இருப்பதை பார்ப்பதற்காகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரொமான்டிக் ஜோடியாக இருக்கும் கதிர்-முல்லையை கடந்த சில வாரங்களாக சோகமாகவே பார்க்க முடியவில்லை என சின்னத்திரை ரசிகர்கள் சலிப்படைந்துள்ளனர்.

Next Story

- Advertisement -