மைதானத்தில் மட்டுமல்ல கல்லூரியிலும் நாங்கள் கில்லி.! இன்ஜினியரிங் பட்டதாரியான 5 கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் விளையாடும் அனைவரும் அதில் வெற்றி பெறுவதில்லை ஒரு சில வீரர்கள் சிறிது காலத்திலேயே விளையாட்டிலிருந்து காணாமல் போய்விடுவார். அப்படி கிரிக்கெட்டிலிருந்து காணாமல் போன வீரர்கள் படித்திருந்தால் தங்கள் படிப்பை வைத்து முன்னேறி விடுவார்கள். கிரிக்கெட்டில் மட்டுமல்லாது சில வீரர்கள் படிப்பிலும் கில்லியாக செயல்படுவார்கள்.  அப்படி கிரிக்கெட்டிலும் படிப்பிலும் சிறந்து விளங்கிய வீரர்கள்.

ரவிச்சந்திரன் அஸ்வின்: தமிழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர். டெஸ்ட் போட்டிகள் என்றாலே அஸ்வின் கலக்கி விடுவார். டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் விளையாட்டில் காட்டிய ஆர்வத்தை படிப்பிலும் காட்டியுள்ளார். சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியில் பி. டெக் ஐ.டி படிப்பை முடித்துள்ளார்.

Ashwin-Cinemapettai.jpg
Ashwin-Cinemapettai.jpg

சயீத் அன்வர்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சயீத் அன்வர். ஒருநாள் போட்டிகளில் 8824 ரன்ககளும் டெஸ்ட்டில் 4052 ரன்ககளும் விளாசியுள்ளார். படிப்பிலும் பின்னும் இவர் கம்யூட்டர் இன்ஜினியரிங் படித்துள்ளார்.

Anwar-cinemapettai.jpg
Anwar-cinemapettai.jpg

அனில் கும்ப்ளே: இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். இவர் மைதானத்தில் மட்டுமில்ல கல்லூரியிலும்  கலக்கியுள்ளார். மிகவும் கண்டிப்பான இவர் இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்.

Anil-Cinemapettai.jpg
Anil-Cinemapettai.jpg

மிட்செல் சாண்டர்: நியூசிலாந்து அணியின் முக்கிய ஸ்பின்னர் மற்றும் ஆல்ரவுண்டர். சர்வதேச டி20களில் இவர் மிகச் சிறப்பாகவே விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். சாண்டர் வைக்கட்டோ பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.

Santer-Cinemapettai.jpg
Santer-Cinemapettai.jpg

சப்ராஸ் அஹமது:  பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்தவர் சப்ராஸ் அஹமது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சர்ப்ராஸ், பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அளவில் 5500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். சர்ப்ராஸ் அஹமது மின்னணு பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

Sarfaz-Cinemapettai.jpg
Sarfaz-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்