L-R Mr Shobu Yarlagadda, Mr SS Rajamouli, Mr Sharad Devarajan(1)பாகுபலியின் வெற்றி இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், மக்களைக் கவர புதியதொரு அவதாரம் எடுக்க உள்ளது பாகுபலி. படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், சினிமாவையும் தாண்டி தனது கால் தடத்தைப் பதிக்கவிருக்கிறது.

இப்படத்தில் தனது சிறந்த VFX களின் மூலம், பிரம்மாண்டத்தை கண் முன் கொண்டுவந்த, ஆர்க் மீடியா வொர்க்ஸ்ம் மற்றும் கிராபிக் இந்தியாவும் இணைந்து பாகுபலியை காமிக் நாவல், அனிமேஷன் மற்றும் கேம்ஸ் வடிவில் வழங்க உள்ளனர்.

அதிகம் படித்தவை:  அமெரிக்காவில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இதைப் பற்றி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி “சினிமாவைத் தாண்டியும் பாகுபலி பயணிக்க உள்ளது தனக்குப் பெருமையாக உள்ளது எனக் கூறியுள்ளார்”. மேலும் சிறந்த விஷுவல் காட்சிகளின் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை உருவாக்கிய பாகுபலி, இந்திய சினிமாவை பாகுபலிக்கு முன், பாகுபலிக்குப் பின் என்று அறியப்படுத்தும் என்று கிராபிக்ஸ் இந்தியாவின் நிறுவனர் மற்றும் இணை நிறுவனர் தேவராஜன் கூறியுள்ளார்.