நவீனால் தன் தலையிலே மண்ணை வாரி போட்ட விஜய்.. காவிரியிடம் காதலுக்கு தூது போகும் தாத்தா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், குமரன் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத கங்கா, சினிமாலாம் வேண்டாம் ஒழுங்கா நம்ம வேலையை பார்க்கலாம் என்று குமரன் நடிப்புக்கு முற்றுகை போட்டு விட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் குமரனுக்கு காவிரி உதவி பண்ணுகிறார்.

அந்த வகையில் கங்காவிடம் பேசி குமரன் நடிப்பதற்கு சம்மதத்தை வாங்கி விட்டார். இதனை தொடர்ந்து காவிரியை பழைய மாதிரி சிரித்த முகமாக நக்கல் நையாண்டி பேச்சுடன் கொண்டு வர வேண்டும் என்று விஜய் மெனக்கிட செய்கிறார். ஆனால் காவேரி, நவீனிடம் சொன்ன ஒரு வார்த்தையை யோசித்து விஜய்யை விட்டு விலகிப் போக பார்க்கிறார்.

நவீனை வைத்து காவிரியை சீண்டிப் பார்க்கும் விஜய்

இதற்கிடையில் வெண்ணிலாவை பற்றி விஷயங்களை தெரிந்து கொண்ட ராகினி, வெண்ணிலவை தேடி பிடித்து விஜய் கண் முன்னாடி நிறுத்த வேண்டும் என்று நாளா பக்கமும் அலைந்து தேடுகிறார். அந்த வகையில் எப்படியும் வெண்ணிலாவை கண்டுபிடித்து விடுவார். இந்த சூழலையில் நவீன், விஜய்யிடம் பேசுவதற்காக ஆபீசுக்கு வந்திருக்கிறார்.

நவீன் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் ரிசப்ஷனில் இருந்து விஜய்க்கு போன் பண்ணி கேட்கிறார். ஆனால் விஜய், நவீனை பார்க்க விருப்பம் இல்லாததால் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாக சொல்லி வெளியே அனுப்ப சொல்கிறார். அதன்படி நவீன், விஜய்யை சந்திக்காமல் வெளியே போய்விடுகிறார். ஆனால் எப்படியாவது காண்ட்ராக்ட் கல்யாணம் எனக்கு தெரிந்து விட்டது என்பது காவிரிக்கு நான் சொல்லிவிட்டேன் என்பதை சொல்ல வேண்டும் என்று தான் நவீன் வந்தார்.

அட்லீஸ்ட் நவீன், இந்த விஷயத்தை விஜய் இடம் சொல்லி இருந்தால் இந்த குழப்பத்திற்கு மிகப்பெரிய தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் விஜய், இது எதுவும் தெரியாமல் நவீனை சந்திக்காமல் அனுப்பிவிட்டார். ஆனால் நவீன் ஆபீசுக்கு வந்துட்டு போனதை காவேரி பார்த்த நிலையில் விஜய்யிடம் போயி நவீன் எதற்கு உங்களை பார்க்க வந்தான் என்று கேட்கிறார்.

அதற்கு விஜய், எனக்கும் நவீனுக்கும் ஆயிரம் டீலிங் இருக்கும். அதெல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது என்று சும்மா நக்கலாக பேசுகிறார். உடனே காவிரி, என்ன தைரியம் இருந்தால் என்னிடமே டீலிங் பற்றி பேசுகிறீர்கள் என்று மனதிற்குள் புலம்பி விஜய்யை திட்ட ஆரம்பித்து விடுகிறார். இதனால் ஒட்டுமொத்தமாக இனி விஜய் சகவாசம் வேண்டாம் என்று நினைக்கும் காவிரியை திடீரென்று தாத்தா சந்தித்து பேசுகிறார்.

அந்த வகையில் காவிரியிடம், விஜய் பிறந்தநாளுக்கு நீ என்ன சர்ப்ரைஸ் பண்ண போகிறாய் என்று கேட்கிறார். அதற்கு காவிரி நான் எதுவும் பண்ணவில்லை, அதைப் பற்றி நான் யோசிக்கவும் இல்லை என்று சொல்கிறார். உடனே தாத்தா, நீ என்ன இப்படி சொல்கிறாய் உன் பிறந்தநாளுக்கு அவன் நிறைய சர்ப்ரைஸ் பண்ண வேண்டும் என்று ஒவ்வொரு விஷயமும் யோசித்து பண்ணுகிறான்.

நீ ஏன் எதிலும் விருப்பமே இல்லாத மாதிரி அவனிடமிருந்து விலகுவது போல் இருக்கிறாய் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு நடந்த உண்மை எதையும் சொல்ல முடியாமல் காவிரி அமைதியாக நிற்கிறார். அப்பொழுது தாத்தா, விஜய் உன் மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறான். உன்னை விட்டு ஒரு நாள் கூட பிரிஞ்சு இருக்க மாட்டான். அதனால் அவனுடைய காதலை புரிந்து அதற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள் என்று விஜய்யின் காதலுக்கு தூதுவாக காவேரியிடம் பேசுகிறார்.

ஆனால் விஜய், தன் காதலை சொல்லாமல் அவர் தலையிலேயே மண்ணை வாரி போடும் அளவிற்கு மௌனமாக இருக்கிறார். இந்த சூழலை தாண்டி காதலை சொல்ல வரும் பொழுது வெண்ணிலா, விஜய் முன்னாடி வந்து நிற்கப் போகிறார். ஏற்கனவே பெண்ணிலாக்கு எல்லாம் மறந்த நிலையில் விஜய் மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. அந்த வகையில் வெண்ணிலாவிற்காக, தன்னுடைய காதலை எதுவும் சொல்லாமல் விஜய் மறைத்து வைக்கப் போகிறார்.

அதே மாதிரி காவிரியும், விஜய் மனதிற்குள் நாம் இல்லை வெண்ணிலா தான் இருக்கிறார் என்று தவறாக நினைத்து விஜய் விட்டு விலக முடிவு எடுக்கப் போகிறார். இப்படி நாலா பக்கமும் இருக்கும் பிரச்சனைகளுக்கு நடுவில் எப்படி விஜய் காவேரி காதல் ஒன்று சேருகிறது என்பதுதான் அடுத்த காட்சியாக விறுவிறுப்பான கதைகளுடன் நகரப் போகிறது.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -