சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபில் போட்டிகளை பொறுத்தவரை ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள டீம் என்றால் அது நம் சி எஸ் கே தான். இரண்டு வருட தடையை தொடர்ந்து மீண்டும் களம் இறங்கியுள்ள டீம், இம்முறையும் பிலே – ஆப் சுற்று தகுதி பெற்றுவிட்டது.

CSK

கிளப் கிரிக்கெட் இணைப்பதை தாண்டி, இந்த டீம் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திடம் தனி பந்தம் உண்டு. ஆராம்ப சீசனில் இருந்த பிளெமிங், ஹஸ்ஸி , முரளி விஜய் தொடங்கி இப்பொழுது சேர்ந்த ராயுடு , ஹர்பஜன், தாஹிர் என அனைவரும் ஒருவொருக்கொருவர் சப்போர்ட் ஆக இருப்பது தான் கூடுதல் பிளஸ்.

மைதானத்தில் கேப்டன் தோனி தல என்றால், சின்ன தல ரெய்னா தான் தளபதி. உள்ளே இவர்கள் கலங்கினார்கள் என்றால், பவிலியனில் தோனி மனைவி சாக்ஷி தலைமயில் முழு ஆதரவு அளிப்பது பெண்கள் ஆர்மயின் வேலை.

Priyanka Raina – Sakshi Dhoni

க்ராஸியா ரெய்னா

ரெய்னா – பிரியங்கா தம்பதியின் செல்ல மகள் பெயர் க்ராஸியா. சி எஸ் கே ஆடும் போட்டிகளில் இவர்களையும் தவறாமல் நாம் பார்க்க முடியும். தோனியின் மகள், ஹர்பஜன் சிங்கின் மகள் என இவர்கள் அடிக்கும் லூட்டி அடிக்கடி போட்டோ , வீடியோ வகையில் சமூகவலைத்தளங்களில் வெளியாகும்.

இந்நிலையில் நேற்று ரெய்னா மகளுக்கு இரண்டாவது பிறந்தநாள். நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் தோனி , பிராவோ, ஹர்பஜனின் மனைவி போன்றோரும் உடன் இருந்தனர்.