தண்ணீர் லாரியை GPS வச்சி புடிக்க போறாங்கலாம்.. குடிநீர் முறைகேட்டை தடுக்க புதிய முயற்சி

தமிழ்நாட்டில் சமீப காலமாக தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வந்தனர். மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை வந்தபிறகுதான் அனைவரிடமும் கவனத்தைப் பெற்றது.

தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க அரசு குடிநீர் லாரிகளில் தண்ணீரை அனுப்பி வருகிறது. ஆனால் அப்படி இருந்தும் முறைகேடு ஏற்படுவதாக பல குற்றச்சாட்டுகள் வந்தன. அதாவது அமைச்சர்களின் வீடுகளுக்கே தண்ணீர் லாரி போவதாக வந்த குற்றச்சாட்டை தவிர்ப்பதற்காக தற்போது முதல் முறையாக மதுரை மாநகராட்சி தண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் மற்றும் சென்சார் கருவியை பொருத்தி உள்ளனர்.

இனிமேலாவது அமைச்சர்களின் வீடுகளுக்கு தண்ணீர் லாரி போகாமல் மக்களின் வீட்டிற்கு போகுமா என்பதைப் பார்கத்தான் இந்த வசதியாம். இந்த லாரிகளில் வைக்கப்படும் ஜிபிஎஸ் வசதியை கொண்டு சரியாக தண்ணீர் போய் சேருகிறதா என்று யார் பார்க்க போகிறார்கள், அதே அரசாங்கம்தான் அப்படி இருக்கும்பொழுது தவறை யார் சுட்டி காமிப்பர்கள். பொறுத்திருந்து பார்க்கலாம் ஏதும் குற்றவாளிகளை கண்டுபுடிக்கிறார்களா என்று பார்க்கலாம்.

Leave a Comment