மாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அல்ல நடிகராக.

கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவநட்சத்திரம்’ என்று இரண்டு அதிரடி பிரம்மாண்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் தன் படங்களில் சின்ன கேமியோ ரோல்கள் மட்டுமே நடித்துள்ளார்.

இதுவரை கௌதம் வாசுதேவ் மேனன் மலையாள படத்தில் நடித்ததும் இல்லை, இயக்கியதும் இல்லை. இந்நிலையில் இவர் மலையாளத்தில் உருவாகி வரும் “நாம்” படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார்.

ஜோஷி தாமஸ் பலிக்கல் என்ற புதுமுக இயக்குனரின் இப்படம் காலேஜ் காம்ப்ஸ்சில் நடுக்கும் கதை. இயக்குனரின் நண்பர் ஒருவர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இப்படம். இசையை மைய்யமாக கொண்டது. இப்படத்தில் இயக்குனர் வேடத்தில் தான் நடித்துள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அளித்துள்ள  பேட்டியில்..

‘‘இயக்குனர் ஜோஷி சொன்ன கதையும் அவர் காண்பித்த படத்தின் சில விஷுவல்ஸும் என்னை ரொம்பவும் கவரந்தது. அந்த கதையில் எனக்காக அவர் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரமும் என்னை இம்பரஸ் செய்தது. அந்த கேரக்டர் தான் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும். என்சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் படமாக்கப விருப்பதாக அவர்கள் கூறியதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்  வினீத் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் நிவின் பாலியுடன், ‘ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்’ படத்தில் நடித்திருக்க வேண்டியது எனினும் 2015இல் வந்த மழை வெள்ளம் காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார்.

“மலையாளத்தில் படம் பண்ணுவதற்கு சில காலங்களாகவே முயற்சி எடுத்து வருகிரேன். மம்மூட்டி, மோகன் லால், பாஹாட் பாசில், நிவின், டோவினோ, வினீத் என்று பலரிடம் பேசியுள்ளேன். விரைவில் ஒர்க் அவுட் ஆகும் என்று நம்புகிறேன் ஜனவரி அல்லது பிப்ரவரியில் அதிகார பூர்வ அறிவிப்பு வர வாய்ப்புள்ளது.” என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.