Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதிக்கு கூட கதை எழுதி விடலாம் ஆனால் இவருக்கா.? ஆள விடுங்க என ஓடிய கௌதம் வாசுதேவ் மேனன்
தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குனர் பட்டியலில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமான இடத்தில் உள்ளார். இவருடன் கைகோர்ப்பதற்கு சூரியா மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக வெளிவந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
சமீபத்தில் நடந்த பேட்டியில் கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்க்காக நான் கதை எழுதி விடுவேன், முழுக்கதையும் கேட்பார், ஆனால் என்னிடம் கிளைமாக்ஸ் இருக்காது. ஆகையால் இத்தனை நாள் தள்ளிப் போய்விட்டது என்று கூறியுள்ளார்.
மீண்டும் முழு கதையுடன் தளபதியை சந்தித்து இருவரும் சேர்ந்து கண்டிப்பாக படம் பண்ணுவோம் என்று தெரிவித்தார். மரியான் படத்தில் நடித்த பார்வதி மேனனுக்கு மட்டும் என்னால் கதை எழுத முடியாது கடினமான விஷயம் என்று தெரிவித்துள்ளார் கௌதம்.
மரியான் படத்திற்கு பின் உத்தமவில்லன் கமலஹாசனுடன் இணைந்து ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
