fbpx
Connect with us

Cinemapettai

காலை வாரிய முன்னணி நடிகர்கள்.. விரக்தியில் கௌதம் மேனன் எடுத்த அதிரடி முடிவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காலை வாரிய முன்னணி நடிகர்கள்.. விரக்தியில் கௌதம் மேனன் எடுத்த அதிரடி முடிவு

ஒரு காலத்தில் கௌதம் மேனன் படம் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அது மட்டுமல்லாமல் அவருடைய ஸ்டைலிஷான மேக்கிங் திறமைக்காகவே பல ரசிகர்கள் உள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களுக்கு இன்னமும் ரசிகர் மத்தியில் ஒரு கிரேஸ் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் சமீபத்தில் தனுஷ் கௌதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படம் அவரை அதலபாதாளத்தில் தள்ளியது. அதுமட்டுமில்லாமல் அவர் தயாரிக்கும் படங்களும் இயக்கும் படங்களும் பாதிக்கிணறு மட்டுமே தாண்டி தவிக்கிறது.

முன்னணி நடிகர்களும் தற்போது கௌதம் மேனனுக்கு வாய்ப்பு கொடுக்க யோசித்து வருகின்றனர். சமீபத்தில் சிம்பு த்ரிஷாவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான குறும்படத்தை இயக்கி வெளியிட்டு பல்வேறு சர்ச்சைகளில் மாட்டினார்.

அதையெல்லாம் போக்குவதற்காக தற்போது சாந்தனு, மேகா ஆகாஷ் ஆகிய இருவரையும் வைத்து ஒரு பாடலை தயார் செய்து வெளியிட உள்ளார். இந்த பாடல் வெற்றி பெற்றால் இந்த இருவரையும் வைத்து வருங்காலத்தில் ஒரு படம் இயக்கப் போவதாகவும் அவரது வட்டாரங்களில் செய்திகள் வந்துள்ளன.

ஆனால் அது எத்தனை வருடம் ஆகுமோ என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் கவலையாக உள்ளது. கௌதம் மேனன் மட்டும் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்து சரியான டிராக்கில் சென்றால் தமிழ் சினிமாவில் அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Continue Reading
To Top