7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 34 திருத்தங்களுடன் மத்திய அமைச்சரவை நேற்று ஏற்றுக் கொண்டது. திருத்தப்பட்ட புதிய விகிதங்கள் ஜுலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. திருத்தப்பட்ட படிகள் மூலம் 47 லட்சம் ஊழியர்கள் பயனடைவர்.

அதேநேரம் இதனால் அரசுக்கு ஆண்டிற்கு 30ஆயிரத்து 748 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.

ஷியாச்சின் பனிச்சிகரத்தில் பணிபுரியும் ராணுவ கடைநிலை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான படிகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ராணுவ வீரர்களுக்கு ரூ. 30ஆயிரம் கூடுதல் படிகள் கிடைக்கும்.இதற்கு முன்பு ரூ. 14 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

அதே போல் மேல்மட்ட அதிகாரிகளுக்கு இதற்கு முன்பு படிகள் மட்டும் ரூ. 21 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த தொகை ரூ. 42 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.