சற்று நாட்கள் முன்பு ஒரு மூதாட்டியின் ஸ்மார்ட் கார்டில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் பதியப்படிருன்தது இணையத்தில் வைரலாக பரவியது.

தற்போது அதே போன்று உடுமலை பேட்டையை சேர்ந்த நல்லசிவம் நாச்சிமுத்து என்பவரது ஸ்மார்ட் கார்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக கடவுள் விநாயகரின் புகைப்படத்தை பதிந்துள்ளனர்.

இதே போல் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பாப்பிரெட்டிபட்டியில் ஒருவரின் ஸ்மார்ட் கார்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக ஒரு ஒற்றைக்கால் செருப்பு படத்தை பதிந்துள்ளனர்.

இது குறித்து சர்ச்சையில் ஈடுபடும் பொதுமக்களை சமாதானம் செய்து அவர்களுக்கு புது அட்டை வழங்கி வருவது சகஜமாகி வருகிறது. ஸ்மார்ட் கார்டில் இது போன்று புகைப்படங்களை மாற்றித் தருவதற்கு 100 ரூபாய் லஞ்சம் வாங்கி வருகிறார்கள்.

இந்த லஞ்சம் வாங்கும் வீடியோவும் இணையத்தில் வெளியானது. இது குறித்து அறிக்கை விடுத்துள்ள அரசு இது போன்ற தவறுகளில் ஈடுபடும் அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து இனி பணம் பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அடப்பாவிகா உங்க அல்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா!