fbpx
Connect with us

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆப்பு வச்ச தமிழக அரசு.. நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம்!

online-rummy-cinemapettai

India | இந்தியா

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆப்பு வச்ச தமிழக அரசு.. நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம்!

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் அதிகம் உள்ளனர்.

மேலும் இவர்கள் ஆன்லைனில் விளையாடுவது மட்டுமல்லாமல், பணத்தை இழந்த காரணத்தால் தற்கொலை செய்து கொள்வதை சமீபகாலமாக வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யுமாறு பல கோரிக்கைகள் எழுந்தன. மேலும் இந்த விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக பதில் அளிக்க வேண்டி மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆன்லைன் ரம்மி உட்பட இணையதள சூதாட்ட விளையாட்டுகள் அனைத்தையும் தடை செய்வதற்கான, அவசர சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளாராம்.

அதாவது இந்த அவசர சட்டத்தின் மூலம், ஆன்லைன் ரம்மி விளையாட்டை வைத்திருந்தால் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் விளையாடுபவரின் கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் எதுவாயினும் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த  தமிழக ஆளுநருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்  குவிந்து வருகின்றன.

online-game

online-game

Continue Reading
To Top