fbpx
Connect with us

Cinemapettai

தனியார் பள்ளிகளின் ஆதிக்கம்.. அரசு பள்ளிகள் மூடல்.. இஸ்ரோ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசு பள்ளியும் மூடப்படுகிறது

nilgiri-school-closed

Tamil Nadu | தமிழ் நாடு

தனியார் பள்ளிகளின் ஆதிக்கம்.. அரசு பள்ளிகள் மூடல்.. இஸ்ரோ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசு பள்ளியும் மூடப்படுகிறது

தனியார் பள்ளிகள் சமீப காலமாக பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதனால் அரசுப் பள்ளிகள் தற்போது அதிக இடங்களில் மூடப்பட்டு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

அவரது குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆனால் தற்போது அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை வரிசையில் நிற்பதால் கல்வித்துறை தற்போது இயங்கிவரும் பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளனர்.

இதைப்பற்றி குன்னூர் நகர நுகர்வோர் விழிப்புணர்வு சங்க தலைவரும் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மனோகர் தற்போது தனியார் பள்ளிகள் அதிகம் வந்துள்ளன.இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் என பல சாதனையாளர்களை உருவாக்கிய இப்பள்ளிக்கு மூடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கூலி வேலை செய்பவர்கள் கூட கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து விட வேண்டுமென நினைக்கின்றனர். அதற்கு காரணம் அரசுப் பள்ளியின் கல்வி தரம் குறைவாக இருப்பது.

மேலும் அவர் தனியார் பள்ளிகள் கொடுக்கும் இணையான கல்வித் தரத்தை அரசு பள்ளிகளின் கொடுத்தால் மாணவர்கள் கண்டிப்பாக அரசுப்பள்ளியில் சேர்த்து விடுவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகள் கண்டிப்பாக தொடர்ந்து நடத்தி வர வேண்டும் அப்போதுதான் கல்வித்தரம் உயரும் எனவும் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top