Tamil Nadu | தமிழ் நாடு
பத்தாயிரம் கோடி மதிப்பிலான புத்துணர்வு ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் தமிழக அரசு.. துள்ளி குதிக்கும் இளைஞர்கள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்த்து தமிழகத்தில் தொழில் தொடங்க வைப்பதற்காக சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளார்.
இதன் காரணமாக தொழிற்சாலை நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை கொண்ட 14 புத்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு இன்று முதலமைச்சரின் முன்னிலையில் கையெழுத்திட உள்ளது.
இதில் ஜே எஸ் டபிள்யூ குரூப் 6,300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை முன்னிறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிதாக அப்போலோ டயர்ஸ் மற்றும் பிரிட்டானியா பிஸ்கட் இன்டஸ்ட்ரி ஆகியவை ஒரகத்திலும் மற்றும் கங்கைகொண்டானிலும் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனைப்பற்றி அதிகாரிகள், ஜே எஸ் டபிள்யூ குரூப் காற்றாலை மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தும் திட்டங்களை தமிழ்நாட்டில் உள்ள நான்கு ஐந்து மாவட்டங்களில் அமல்படுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.

edappadi
மேலும் ஏற்கனவே 41 புத்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளனர். இந்தத் திட்டங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
