fbpx
Connect with us

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% நீட் இட ஒதுக்கீடு செய்த தமிழக அரசு.. மகிழ்ச்சியில் திளைக்கும் பெற்றோர்கள்!!

edappadi-palaniswami

Tamil Nadu | தமிழ் நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% நீட் இட ஒதுக்கீடு செய்த தமிழக அரசு.. மகிழ்ச்சியில் திளைக்கும் பெற்றோர்கள்!!

தமிழகத்தில் அதிமுக அரசை செவ்வனே செயலாற்றி வரும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் செயல்பாடுகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சூழலில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வில் 7.5% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மசோதாவிற்கான அரசாணை தற்போது வெளியாகி உள்ளது.

எனவே நீட் தேர்வில் இருக்கும் சிரமங்களை மனதில் வைத்துக்கொண்டு, மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவ பட்டப் படிப்பை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது.

இதற்கு உச்சநீதிமன்றமும் முழு ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.

அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குமாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை அமைச்சர்கள் கொண்ட ஒரு குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

அந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் மூன்று முதல் நான்கு வாரங்கள் தனக்கு தேவைப்படுவதாக ஆளுநர் விளக்கம் அளித்தார்.

neet-cinemapettai

neet-cinemapettai  

அதன்பின் தற்போது தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்பை பயில 7.5% இட ஒதுக்கீட்டை வழங்கும்படி உத்தரவிட்டுள்ள அரசாணை தற்போது வெளியாகி உள்ளது.

எனவே தற்போது வெளியாகி உள்ள, இந்த மசோதாவால் அரசுப் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Continue Reading
To Top