நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் தீவிரம் காட்டும் தமிழக அரசு.. பயனடையும் 17 லட்ச ஏழை எளிய மக்கள்

தற்போது ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி இலக்கை அடைவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக கட்சியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

எனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல நல்ல திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளார். அதுவும் குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற அனைத்தையும் இலவசமாக வழங்கி உள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 அவரவர் வீடுகளுக்கு சென்று சேரும்படி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது ஏழை எளிய மக்களின் 6 சவரன் வரை அடகில் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதாவது அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ஜனவரி மாதப் 31ஆம் தேதி வரை நிலுவையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைகடன் கணக்குகளையும் ஒப்படைக்கும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது கூட்டுறவு வங்கியில் 6 சவரன் வரையிலான நகைக்கடன் பெற்றிருக்கக் கூடிய ஏழை மக்களின் கடனை தள்ளுபடி செய்து அவற்றை சுற்றறிக்கையாக அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் பிறப்பித்துள்ளார்.

இதன்மூலம் 17 லட்சம் மக்கள் பயன் அடைவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி காண பணியை தீவிரப்படுத்தி உள்ளது தமிழக அரசு விரைவில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

அது மட்டுமன்றி தமிழக அரசு இதற்கு முன்பு கூட்டுறவு வேளாண் கடனை தள்ளுபடி செய்து அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த கடனை தள்ளுபடி செய்து, அதற்கான ரசீதை தற்போது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அனைத்து மக்களும் தங்களின் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்