fbpx
Connect with us

Cinemapettai

அரசு உழியர்கள் உடையில் அதிரடி மாற்றம்.! இனி கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும்

Tamil Nadu | தமிழ் நாடு

அரசு உழியர்கள் உடையில் அதிரடி மாற்றம்.! இனி கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும்

அரசு ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தற்போது ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதாவது தமிழக அரசு ஊழியர்கள் குறிப்பாக தலைமையகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அலுவலகத்தின் நல்லொழுக்கம் பாதிக்காத வகையில் இடத்திற்கு ஏற்றார் போல உடை அணிந்து வரவேண்டும் என்றும் இதன்படி பெண் ஊழியராக இருந்தால் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதாரை அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆண் ஊழியர்களாக இருந்தால் சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் அதுவும் கேஷுவல் ஆடைகள் அணியாமல் ஃபார்மல் ஆடைகளை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நீதித் துறையைச் சார்ந்த மன்றங்களில் ஆஜராக வேண்டியதாக இருந்தால் அவர்கள் முழுமையுடன் கூடிய கோட் அணிந்து வரவேண்டும் இல்லை என்றால் திறந்த கோட் அணிந்து அதில் டை அணிந்து வரவேண்டும் தெரிவித்துள்ளார்.

பெண் அதிகாரியாக இருந்தால் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதாரை அணிந்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top