ஆபாச நடிகையான சன்னி லியோன், பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் இவர் காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதற்கு பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற விளம்பரங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு பற்றி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சன்னி லியோனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது… ‛‛ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதை அந்நாட்டு அரசு தான் முடிவு செய்ய வேண்டும். நான் உட்பட வேறு யாரும் இது பற்றி முடிவு செய்ய முடியாது. இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக பேச அனைவருக்கும் உரிமை உள்ளது. மக்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று நான் கூற முடியாது. ஆகையால் இந்த விஷயத்தில் நான் செய்ய வேண்டும் என்பதே அரசே முடிவு செய்யட்டும், இதுப்பற்றி நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here