fbpx
Connect with us

Cinemapettai

ஆளுநர் வருகை ரத்து? அதிமுக வட்டாரத்தில் பதற்றம்; பரபரப்பு

Politics | அரசியல்

ஆளுநர் வருகை ரத்து? அதிமுக வட்டாரத்தில் பதற்றம்; பரபரப்பு

சசிகலா சட்டமன்ற கட்சித் தலைவராக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரும் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

முதல்வராக சசிகலா பதவியேற்கவுள்ள நிலையில், ஆளுநர் எப்போது வருவார் என்று ஆளுநர் மாளிகையில் தகவல் கோரப்பட்டது. இவர் திடீரென டெல்லி விரைந்ததால் முதல்வராக சசிகலா பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் இன்று காலை சென்னை வரவுள்ளதாக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாளிகை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டது.

சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு 9 மணிக்கு மெரீனா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து சுமார் 45 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார்.

இதனைத்தொடர்ந்து, சசிகலா என்னை மிரட்டித்தான் ராஜினாமா செய்ய வைத்தார்கள் எனவும், அடிமட்ட தொண்டன் விரும்புபவரே அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என்று நிருபர்களுக்கு அதிரடி பேட்டியை அளித்தார்.

இந்த அதிரடி பேட்டியால், அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக மூத்த தலைவர்களும் பல்வேறு எதிர்ப்புகளை ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்வைத்தனர்.

இந்நிலையில், இன்று சென்னை வர இருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகார் ராவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் அதிமுகவினரிடையே இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top