India | இந்தியா
ஆன்லைன் வியாபாரங்களுக்கு ஆப்பு வைத்த இந்தியா.. சிக்கித் தவிக்கும் அமேசான் மற்றும் பிலிப்கர்ட்..

அமேசான் மற்றும் பிலிப்கார்டுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு ஆணை..!
ஆன்லைன் நிறுவனங்களில் மிகவும் பிரபலமானது அமேசான் மற்றும் பிலிப்கர்ட். இந்த நிறுவனங்களில் தற்போது இந்தியா ஒரு கட்டுப்பாட்டு விதியை விதித்துள்ளது.
உள்நாட்டு வியாபாரிகளை காப்பாற்றும் வகையில் இந்த விதி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. 2019 பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருவதாக கூறப்பட்டு வருகிறது.
அதாவது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஒரு உற்பத்தியாளரின் மொத்த யூனிட்களையும் அதை தங்கள் இணையதளத்தில் மட்டும் விற்பனை செய்யும் வழக்கம் உள்ளது.
இவ்வாறு ஒப்பந்தம செய்து கொள்வனர். இதனால் உள்நாட்டு வியாபாரிகள் நஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். கேஷ் பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போன்ற சலுகைகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் உள்நாட்டு வியாபாரிகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றனர். இதனால் எந்த ஒரு நிறுவனமும் 25 விழுக்காட்டிற்கு மேல் ஆன்லைனில் அந்த நிறுவனத்தின் பொருள்களை விற்கக் கூடாது என ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால்அமேசான் மற்றும் பிலிப்கர்ட் நிறுவனங்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
