Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

என்னது ரேஷன் கடையில இலவசமா இத கொடுக்கிறார்களா? மகிழ்ச்சியில் திளைக்கும் மக்கள்!

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தற்போது பெரும் சவாலாக இருப்பது கொரோனா வைரஸ் தாக்கம் தான். மேலும் இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்தவகையில் கொரோனா காலத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நமது இந்திய அரசின் சார்பில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு இலவசமாக மாதத்திற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கொண்டை கடலை வழங்க உத்தரவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி சேமிப்பு கிடங்கில் இருந்து நவம்பர் 21-ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு கொண்டைக்கடலை வினியோகம் செய்யப்பட உள்ளதாகவும், டிசம்பர் முதல் ரேஷன் கடைகளில் PHH/AAY கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு வழங்கிய  5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் உத்தரவு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில் கொரோனா வைரஸ் பாதிப்பின் நிவாரணமாக கொண்டகடலை PHH/AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மத்திய தொகுப்பில் இருந்து பெறப்பட்ட கொண்டைகடலை டிசம்பர் 2020 மாதத்திற்குள் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் PHH/AAY என்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ வீதம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே, இந்தத் தகவல்களைக் கேட்ட மக்கள் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top