நக்கல் மன்னன் கவுண்டருக்கு வந்த விபரீத ஆசை.. சினிமாவை விட்டு கவுண்டமணி விலகியதன் ரகசியம்

Goundamani : கவுண்டர் காமெடி என்றால் கவுண்டமணியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அந்த காலத்தில் ரஜினி, கமல் படங்கள் என்றாலே அதில் கவுண்டமணி, செந்தில் கண்டிப்பாக இடம்பெற்று வந்தனர். அதுவும் இவர்களது கால்ஷீட் தான் குதிரை கொம்பாக இருந்தது.

ஆனாலும் கவுண்டமணி சினிமாவில் 40 வயதிற்கு மேல் தான் என்ட்ரி கொடுத்திருந்தார். அதுவும் நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்யராஜ் தான் கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனாலும் கவுண்டமணிக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால் அவரது மார்க்கெட் குறைந்திருந்தது.

அதாவது இப்போது காமெடி நடிகர் சந்தானம், சூரி, யோகி பாபு ஆகியோர் கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். அதே ஆசைதான் அப்போது கவுண்டமணிக்கும் வந்தது. அவ்வாறு இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

கவுண்டமணி சினிமாவை விட்டு விலக காரணம்

தொடர்ந்து பிளாப் கொடுத்து வந்த போது அடுத்தடுத்த காமெடி நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். உடனே சுதாரித்து கொண்ட கவுண்டமணி நமக்கு காமெடி தான் செட் ஆகும் என மீண்டும் காமெடி ரூட்டுக்கு வந்து விட்டார்.

அவருடைய நல்ல நேரம் விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடித்து காமெடியில் கலக்கி வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் சுகர் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. அதோடு வயது முதிர்வும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இப்போதும் தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் தங்களது படங்களில் கவுண்டமணியை நடிக்க அழைக்கிறார்கள். கவுண்டமணி தன்னால் நடிக்க முடியாது என மறுத்து வருகிறார். ஆனாலும் கவுண்டமணியின் இடத்தை இப்போது உள்ள காமெடி நடிகர்களால் நிரப்ப முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

காமெடியில் கலக்கிய கவுண்டமணி

Next Story

- Advertisement -