கவுண்டமணிக்கு கடைசிவரை நிறைவேறாத அந்த கனவு.. நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்

சினிமாவை பொறுத்தவரை திறமையான பல நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டாக நடிக்கும் போது, அவர்கள் நடிக்கும் அந்த படம் அவர்கள் இடம்பெறக்கூடிய காட்சி என அத்தனையும் நம் மனதில் ஆழப்பதிந்து விடும். ஆனால், சில நேரங்களில் அப்படி அமைந்தும் பயனில்லாமல் போய் விடும். அதற்கு திரைக்கதை, நடிகர்களுக்கான முக்கியத்துவம் என பல காரணங்கள் உண்டு.

அப்படி இன்றைய தலைமுறையினரும் சரி, இதற்கு முந்தைய தலைமுறையினரும் சரி பல நடிகர்கள், இயக்குனர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு ஒரு முறையாவது பணியாற்றி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த அளவிற்கு இந்த நடிகர் திலகம் எனும் அடைமொழி எதுவும் சும்மா அவருக்கு வரவில்லை. அதற்கு சரியான தகுதியான நடிகர் தான் சிவாஜி கணேசன். நடிப்பில் நவரசமும் கற்று தேர்ந்தவர். அதேபோல நடிப்பில் இவர் திலகம் என்றால் அதே போல காமெடியில் இன்று வரை நம் நினைவில் முதலில் வருவது கவுண்டமணி அவர்கள் தான்.

அவரின் டைமிங் காமெடிகளை பற்றி சொல்லவே தேவையில்லை. பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் கை தட்டல் வாங்க கூடியவர். கவுண்டமணியும் பல மூத்த நடிகர்களோடும் இணைந்து நடித்து இருக்கிறார். ஜெமினி கணேசன், ஜெய் சங்கர், வி.கே. ராமசாமி, போன்ற பல நடிகர்களோடு நக்கல் பேச்சு நையாண்டி நடிப்பு என கலக்கி இருக்கிறார் கவுண்டமணி.

ஆனால், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கவுண்டமணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வாய்ப்பு கிடைத்தும் பயனின்றி போனது. அப்படி இவர்கள் இருவரும் இணைந்து நடித்த இரண்டு படங்கள் ‘இமைகள் மற்றும் மண்ணுக்குள் வைரம்’ , இந்த இரண்டு படங்களிலும் கதையோடு ஒத்துப்போகாமல் தனியாக காமெடி ட்ராக் சென்று கொண்டு இருக்கும். அதனால் கவுண்டமணியும் சிவாஜியும் ஒரே காட்சியில் உரையாடிக் கொள்வது போல காட்சிகள் அமையவில்லை.

அப்படி ஒரு சூழ்நிலை அமையாததால் படத்தில் காமெடியில் தனியாக கவுண்டமணி காமெடிக் காட்சிகளில் பிச்சு உதறி இருப்பார். மறுபுறம் சிவாஜி கணேசன் தனது நடிப்பில் அசத்தி இருப்பார். இந்த இரு திறமைகளும் ஒன்றாக இணைய வாய்ப்பு வந்தும் அது நடக்காமல் போய் விட்டது.

இந்த கவலை இப்போதும் கவுண்டமணிக்கு இருக்கிறதாம். ஒருவேளை அவர் நினைத்தது போல அமைந்து இருந்தால், இன்று தமிழ் சினிமாவில் ஒரு நல்ல காமெடி காட்சி கிடைத்து இருக்கும். கமல்ஹாசன் படங்களில் நகைச்சுவை நடிகர் விவேக் இறுதி வரை நடிக்கவில்லை. இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்ற வருத்தத்தை ஒரு மேடையில் விவேக் தெரிவித்து இருந்தார். அதேபோல் நடிகர் கவுண்டமணியின் ஆசையும் நிறைவேறாமல் போய் விட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்