நக்கல் பேச்சால் நாசமா போன கவுண்டமணி.. படமே இல்லாமல் வீட்டில் உட்கார வைத்த சினிமா!

தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணி எவ்வளவு பெரிய நடிகர் என்று அனைவருக்கும் தெரியும்.அவருடைய ஒவ்வொரு படமும் அவரின் காமெடிகளுக்காகவே பல முறை பார்த்தாலும் சலிக்காத அளவிற்கு அபார திறமை உடையவர் தான் நடிகர் கவுண்டமணி. இப்பேர்ப்பட்ட நடிகர் திமிருக்கும், தெனாவட்டுக்கும், ஆணவத்திற்கும் அடிமை என்று சொல்வதை நம்ப முடிகிறதா.? கவுண்டமணி திரைத்துறையில் புகழ் உச்சியில் இருக்கும் போது போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

அப்படி கவுண்டமணியின் திமிர்பிடித்த பேச்சினாலும் கர்வம், ஆணவம் மிகுந்த நடத்தையாலும் அவர் அடைந்தது துன்பம் மட்டுமே. வளர்ந்து வரக்கூடிய காலத்தில் அவரின் அளவுக்கு மிஞ்சிய திமிரான பேச்சும் யாரையும் மதிக்காமல் அவர் நடந்துகொண்ட போக்கும் அவரை படாதபாடு பட வைத்தது. அப்படி ஒரு காலக்கட்டத்தில் காமெடியில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த கவுண்டமணியிடம் நீங்கள் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று யாரோ சொல்லி இருக்கின்றனர்.

அதைக்கேட்ட கவுண்டமணி ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் போலயே என்று நினைத்துக்கொண்டு உடனே பிறந்தேன் வளர்ந்தேன், ராஜாதி ராஜா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். காமெடியனாக அவரை உச்சத்தில் வைத்துப் பார்த்த ரசிகர்கள் ஹீரோவாக அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்த இரண்டு படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதன் பின்பும் கவுண்டமணி திருந்திய பாடில்லை

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கவுண்டமணி ஒரு காலத்தில் சொல்ல ஆரம்பித்துவிட்டார். எத்தனை சான்ஸ்கள் வந்தாலும் ஹீரோ சான்ஸ்காக நான் காத்து கொண்டு இருக்கிறேன் என்று இரண்டு ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் வெட்டியாக வீட்டில் இருந்தார். அப்படி இரண்டு வருடம் வீட்டில் இருந்தும் அவருக்கு ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மாறியதாக தெரியவில்லை. அவரின் திமிரும், நக்கல் பேச்சும் தொடரத்தான் செய்தது.

அதன்பின் இளையராஜாவின் சகோதரரான இயக்குனர் கங்கை அமரன் தான் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் அதில் நீங்கள் காமெடி நடிகராக நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். முதலில் மறுத்த கவுண்டமணி பின்பு ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதற்குக் காரணம் கங்கை அமரன் கவுண்டமணியிடம், இரண்டு ஆண்டுகள் சும்மா இருந்து விட்டீர்கள் இதுக்கு மேல் இருந்தால் திரைத்துறைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் திரையில் இருந்து காணாமல் போய் விடுவீர்கள், மக்கள் உங்களை மறந்து விடுவார்கள் என்று கூறி இருக்கிறார்.

இப்படியெல்லாம் கூறவும் பயந்து போன கவுண்டமணி மீண்டும் கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க வந்தார். கங்கை அமரன் செய்த செயல் தான் கவுண்டமணி, மீண்டும் திரைக்கு வர மிக முக்கிய காரணமாக இருந்தது. ஒருவேளை கவுண்டமணி திமிரு தெனாவட்டு பேச்சினால் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் இன்று அவர் அடைந்த பல உயரங்களை அடைய முடியாமல் போயிருக்கும். ஆணவம் ஒருவரை முடக்கி விடும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு கவுண்டமணி மட்டுமே.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்