Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுஷுடன் கைகோர்க்கும் கவுண்டமணி.. அப்படினா காமெடிக்கு பஞ்சமே இருக்காது

dhanush-mani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷுடன் கைகோர்க்கும் கவுண்டமணி.. அப்படினா காமெடிக்கு பஞ்சமே இருக்காது

மாரி செல்வராஜ் கர்ணன் என்ற படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இவரது நெருங்கிய நண்பரான சுப்ரமணியம் சிவா ஏழு வருடங்களுக்கு முன்பு சீடன் என்ற படத்தை இயக்கியவர். இவர் தனுஷை வைத்து திருடாதிருடி என்ற சூப்பர்ஹிட்டான படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெள்ளை யானை என்ற படம் சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மியா நடிப்பில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

v-yannai

v-yannai

தனுஷ் நடிப்பில், அவரை இயக்கி தயாரித்த பவர் பாண்டி படம் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டின் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருப்பார்கள். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

pa-pandi

pa-pandi

சில தினங்களுக்கு முன்பு சுப்பிரமணிய சிவா அளித்த பேட்டியில் பவர் பாண்டி இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்க இருப்பதாக சுப்பிரமணிய சிவா தெரிவித்துள்ளார்.

கவுண்டமணியின் தீவிர ரசிகன் தனுஷ், ஓய்வுபெறும் நேரங்களில் இவரின் காமெடி மட்டும் தான் பார்த்து ரசித்தாராம். தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் இருக்கும் இந்த சூழ்நிலையில் மீண்டும் திரைக்கு வரும் கவுண்டமணியை எதிர் பார்த்த ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர் கடைசியாக ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, வாய்மை ஆகிய படங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top