Connect with us
Cinemapettai

Cinemapettai

goundamani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவுண்டமணியுடன் டூயட் ஆட மறுத்த நடிகை.. காமெடியன் என்று கலாய்த்த கடுப்பில் கவுண்டமணி செய்த வேலை!

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான் கவுண்டமணிதான் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். தமிழ் சினிமாவில் ராஜாவாக வாழ்ந்த காமெடி நடிகர் என அனைவராலும் அழைக்கப்படுபவர்.

தன்னுடைய படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது 5 ஸ்டார் ஹோட்டல்களில் தான் தங்குவாராம். அதுமட்டுமில்லாமல் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவராம் கவுண்டமணி.

சுந்தர் சியின் விரும்பத்தக்க காமெடி நடிகரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தர் சி கவுண்டமணி கூட்டணியில் உருவான அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அப்படி கார்த்தி சுந்தர் சி கூட்டணியில் உருவான மேட்டுக்குடி படத்தில் கவுண்டமணி பிரபல நடிகை நக்மா உடன் ஒரு டூயட் பாடி இருப்பார். அந்தப் பாடல் செம ஹிட் அடித்தது.

அந்த பாடலில் நடிப்பதற்கு முன்னர் நக்மாவிடம் கேட்டதற்கு கவுண்டமணி போன்ற காமெடியன் உடன் சேர்ந்து என்னால் டூயட் ஆட முடியாது என நக்கலாக தெரிவித்தாராம்.

இதை அறிந்த கவுண்டமணி உடனடியாக படப்பிடிப்பை விட்டு இனிமேல் உங்களது படத்தில் நடிக்க முடியாது என கோபமாக கிளம்பி விட்டாராம். ஆனால் இயக்குனர் சுந்தர் சி நக்மாவிடம் கெஞ்சி அந்த பாடலில் ஆட வைத்துள்ளார்.

அதன் பிறகு கவுண்டமணி அந்த காட்சியை வேண்டுமென்றே கேட்டு வாங்கியது தெரியவந்த பின்னர் நக்மா மற்றும் கவுண்டமணி ஆகிய இருவருமே விழுந்து விழுந்து சிரித்தார்களாம். காமெடி நடிகர்கள் டூயட் ஆடினால் எப்படி இருக்கும் என்ற நினைப்பில் தான் அந்த பாட்டை வைக்கச் சொன்னாராம் கவுண்டமணி.

இன்று தமிழ் சினிமாவில் நக்மா உடன் நல்ல ஆரோக்கியமான நட்பில் இருப்பது கவுண்டமணிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top