தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நகைச்சுவை நாயகன் கவுண்டமணி. இவர் தற்போது அதிகம் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் வசனங்கள் தான் இன்றைய ட்ரண்ட் இளைஞர்களுக்கு கவுண்டர் கொடுக்க பயன்படுகின்றது.

இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். இந்த தருணத்தில் சினி உலகமும் தன் வாழ்த்துக்களை கவுண்டமணி அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது.கவுண்டமணி பிறந்தநாள் ஸ்பெஷல் தகவலாக ஒரு வார இதழ் ஒன்றில் சில செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.

இதில் முக்கியமாக கவுண்டமணி என்ன தான் படங்களில் மற்றவரை கலாய்த்து எடுத்தாலும் தன் மனைவி முன்பு மிகவும் அமைதி தானாம். மஹான் மட்டும் இதில் என்ன விதிவிலக்கா!.

இவர் வீட்டில் அவருடைய மனைவி தான் நிதிமந்திரியாம், கவுண்டமணி கையில் ஏ.டி.எம் கார்ட் கூட இருக்காதாம், நம்ப முடிகின்றதா? இப்படி பல பக்கங்கள் இவருக்கு உண்டு.

இதில் சிறப்பாக ஒரு நாள் தன் நண்பர் பசியில் வாடியுள்ளார், நடிக்க வந்த நேரத்தில் இருவர் கையிலும் பணம் இல்லை, இதனால் அருகில் தன் இரத்தத்தை கொடுத்து அதில் வந்த பணத்தில் நண்பருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தாராம். அதனால் தான் இவரை இன்றைய தலைமுறையும் வாழ்த்துகிறது.