நகைச்சுவையின் மன்னர் என்று அழைக்கப்படும் நடிகர் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இதனை முன்னிட்டு தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் அவரின் நகைச்சுவை வசனங்களிலிருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.

*’நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் .. நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்…

*’பத்த வச்சிட்டியே பரட்டை..’ *’அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..’

*”ஏன்டா, எவன கேட்டாலும் மலேசியாவுல இருந்து காசு வருது, சிங்கப்பூர்ல இருந்து காசு வருதுன்னு சொல்றிங்க, அப்ப இந்தியால இருந்த காசெல்லாம் எங்கடா போச்சு?”

*”டேய் தகப்பா..”

*நாட்ல இந்த தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலடா…”

*”ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி”

*”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மோட்டர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை. நமக்கு மனைவியும் அமையல மோட்டரும் அமையல”

*”அய்யோ.. இப்போ நா எதையாவது வாங்கணுமே.. இந்த தெரு என்ன விலைன்னு கேளு”

*”நான்லாம் அமெரிக்கால பொறக்க வேண்டியது, என் கெரகம் சைக்கிள் கட வச்சிருக்கேன்”

*”காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில எடம் பாக்குறேன்”

*”கோழி குருடா இருந்தாலும், கொழம்பு ருசியா இருக்கணும்டா”

*”இது உலக நடிப்புடா சாமி”

*”க்ரீஸ் டப்பாவ எப்டி எட்டி ஒதச்ச?”

*”பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?”

*”என் அக்கா மகளே இந்து”

*”உங்கக்காளுக்கு சூப்பு வக்கத் தெரியும்னே எனக்கு இன்னிக்குத்தாண்டா தெரியும்”

*”நா இங்க ரொம்ப பிசி… இத பத்தி ஹோம் மினிஸ்டர்கிட்ட பேசுறேன்”