goundamaniநகைக்சுவை மன்னன் கவுண்டமணி தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் 49 ஓ. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அவர் கையில் தற்போது வாய்மை மற்றும்எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.

இந்நிலையில் வாய்மை படம் ரெடியாகி பல மாதங்கள் ஆனபோதும் ரிலீஸ் செய்ய தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, ஒரு புதிய இயக்குனர் கவுண்டமணியின் அலுவலகத்திற்கு தினமும் ஒரு போலிஸ் கதையுடன் வந்து விடுகிறாராம். கவுண்டமணி அலுவலகத்தில் உள்ள ஆட்கள் அவரை பல முறை அனுப்பி வைத்தும் திரும்ப திரும்ப கதையுடன் வருகிறாராம்.

ஒரு கட்டத்தில் கவுண்டமணி அவரை கூப்பிட்டு தற்போதைக்கு எனது இரண்டு படங்களும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை, அப்படங்கள் வெளியான பிறகு வாங்க அப்போது நான் கதை கேட்கிறேன் என்று கூறி அனுப்பிவைத்துள்ளார்.