Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது ‘THE NUN’ திகில் படத்தை கலாய்த்து கொரில்லா படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் !
கொரில்லா
ஜீவா நடிக்கும் 29-வது படம். ‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி அடுத்து இயக்கும் படம் ‘கொரில்லா’. தெலுங்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். சதிஷ், யோகி பாபுவும் நடிக்கின்றனர்.‘காங்’ என்ற ரியல் சிம்பான்ஸி குரங்கு முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ரூபன் பணியாற்றி உள்ளனர். விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என்ற அறிவிப்பு இன்று வந்தது.

Shooting Spot
தி நன்
தி கான்ஜுரிங் , அனபெல்லே தொடர்ந்து அடுத்ததாக வெளியாகும் படம் தான் ‘தி நன்” . ‘தி கான்ஜூரிங்’, ’அனேபெல்’ படங்களின் கால்கட்டத்திற்கு முன்னதாக நடப்பது போன்ற கதைக்களம் இப்படத்தினுடையது. நேற்று இப்படம் ரிலீசாகி உலகெங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

THE NUN
இந்நிலையில் கொரில்லா படக்குழு , இந்த படத்தின் போஸ்டரை தழுவி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

gorilla new poster
சினிமாபேட்டை கிசு கிசு
தமிழ்ப்படம் 2 டீம் புதிய போஸ்டர்களை கலாய்த்து நல்ல மார்க்கெட்டிங் யுக்தியாக அமைந்தது என்பதால், இந்த டீம்மும் அதே ஸ்டைலை பின் பற்றுகின்றனர்.
