பாக்யாவை அனாதையாக நிற்கவைக்க கோபியின் சதித்திட்டம்.. ஹோட்டலை இழுத்து மூட சூழ்ச்சி செய்யும் சைக்கோ

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எங்கே என்ன தவறு நடந்தாலும், யார் என்ன செய்தாலும் அதற்கு காரணம் பாக்கிய தான் என்று ஆரம்பத்தில் இருந்து ஈஸ்வரி பழி சுமத்தி வந்தார். ஆனால் போகப் போக மகனின் தண்டவாளம் எல்லாம் வெளிவந்த பிறகு ஈஸ்வரி, அப்படியே பாக்யாவிடம் சரணடைந்து விட்டார். ஆனால் தற்போது அம்மா போல பிள்ளை என்பதற்கு ஏற்ப கோபியும், எல்லா பிரச்சனைக்கும் காரணம் பாக்கியதான் என்பதற்கு ஏற்ப தவறாக புரிந்து கொண்டார்.

அந்த வகையில் கோபி இரண்டாவது திருமணம் ராதிகாவை செய்த பிறகு நொறுங்கி போன ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் பக்கபலமாக இருந்து பாக்கியா வாக்கப்பட்ட குடும்பத்தை கௌரவமாக காப்பாற்றி வருகிறார். அதிலும் ராதிகா, ஈஸ்வரி மீது தேவையில்லாமல் பழிபோட்டு ஜெயிலுக்கு அனுப்பிய நிலையிலும் பாக்கியதான் மாமியாருக்கு சப்போர்ட்டாக நின்று ஈஸ்வரி மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்.

பாக்யாவை பழிவாங்க சைக்கோவாக மாறிய கோபி

அப்பொழுது கூட இந்த கோபி பாக்கியாவை பற்றி புரிந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து கோபியின் அப்பா அம்மாவின் சந்தோஷத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக மாமனாரின் எண்பதாவது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக நடத்தினார். ஆனால் அதற்கும் கோபப்பட்ட கோபி, பாக்கியாவை டார்ச்சர் பண்ண ஆரம்பித்தார்.

கடைசியில் தாத்தாவின் மரணத்தில் ஈஸ்வரி எடுத்த முடிவால் பாக்கியா அனைத்து சடங்கு சம்பராதையும் செய்தார். இதனால் அவமானப்பட்ட கோபி, இதற்கும் காரணம் பாக்கியதான் என்று நினைத்து பாக்யாவை பழிவாங்க முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் பாக்யா நடத்தும் ஹோட்டலில் ஒரு செப் தேவைப்படுகிறது என்பதை கோபி தெரிந்து கொண்டார்.

அதனால் கோபி அவருக்கு தெரிந்த ஒரு வேலை செய்யும் நபரை பாக்கியா ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கிறார். அதன்படி அந்த நபர் பாக்கியா ஹோட்டலில் இன்டர்வியூக்கு போகிறார். இவரை கேள்வி கேட்ட பாக்கியா இந்த ஹோட்டலுக்கு நீங்கள் சரியானதாக இருப்பீர்கள் என்று முடிவு செய்து அவரை தேர்வு செய்து விட்டார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வருகிறது.

உடனே கோபி, நீங்கள் என்னுடைய ஆளு என்று எக்காரணத்தை கொண்டும் அங்கு இருப்பவர்களுக்கு தெரிய கூடாது. ஆனால் நீங்கள் அங்கு வேலை பார்த்தாலும் எனக்கு விசுவாசமாக தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சூழ்ச்சி பண்ணி விட்டார். இதனை வைத்து பாக்கியாவிடம் இருந்து அந்த ஹோட்டலை அபகரித்து ஒண்ணுமே இல்லாமல் நடுத்தெருவில் நிறுத்த வேண்டும்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக என் அம்மா பிள்ளைகளிடமிருந்து பாக்கியாவை நிரந்தரமாக பிரிந்து யாருமே இல்லாத அனாதையாக நிற்கவைக்க வேண்டும் என்று கோபி சூழ்ச்சி செய்து ஒரு சைக்கோ போல காயை நகர்த்தி வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த சம்பவம்

- Advertisement -spot_img

Trending News