வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

டிடி, பாவனா போல் விஜய் டிவியில் இருந்து விலகும் நீயா நானா கோபிநாத்.. ஷாக்கான, சந்தோஷமான சம்பவம் தான் போல

Gopinath : விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் அடுத்தடுத்த விலகுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் டிடி நீண்ட காலமாக விஜய் டிவியில் இருந்த நிலையில், அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாத சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டிடி விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவதில்லை.

அதேபோல் தான் சமீபத்தில் பாவனாவும் விஜய் டிவியிலிருந்து விலகியதற்கான காரணத்தை கூறியிருந்தார். அதாவது பெண்களுக்கு அங்கு அதிக முக்கியத்துவம் இல்லை அதனால் வெளியேறி விட்டதாக கூறியிருந்தார்.

அதேபோல் கோபிநாத் விஜய் டிவியின் ஆலமரமாக செயல்பட்டு வந்தார். அவரது பலமே நீயா நானா நிகழ்ச்சி என்று சொல்லலாம். இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து கோபிநாத் விலகுவதாக ஒரு செய்தி இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

ஐபிஎல் மேட்சை தொகுத்து வழங்கும் கோபிநாத்

அதாவது வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் மேட்ச் தொடங்க இருக்கிறது. இதை விஜய் டிவி கோபிநாத் தொகுத்து வழங்க இருக்கிறாராம். ஏற்கனவே விஜய் டிவியில் பணியாற்றிய பாவனாவும் முழு நேரமாக கிரிக்கெட் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல் கிரிக்கெட் வர்ணனையாளராக ஆர்ஜே பாலாஜி, படவா கோபி போன்ற பிரபலங்களும் பணியாற்றி வருகிறார்கள். சினிமா மற்றும் அரசியலில் மிகப்பெரிய பிரபலங்களை பேட்டி எடுத்து வந்த கோபிநாத் கிரிக்கெட்டையும் மிச்சம் வைக்கவில்லை.

ஆனாலும் விஜய் டிவியிலிருந்து விலகுவதாக வெளிவந்த செய்தி உண்மை இல்லை என்று கோபிநாத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. ஏனென்றால் தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சியையும் இவர்தான் தொகுத்து வழங்க இருக்கிறாராம்.

- Advertisement -

Trending News