செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிள்ளைகளை பனையம் வைத்து பாக்கியாவிடம் நேரடியாக சவால் விட்ட கோபி.. மாமியாருக்காக ஜெனி எடுத்த முடிவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் இனியா, டான்ஸில் வெற்றி பெற்றதற்கு அப்பா டான்ஸ் கிளாசில் சேர்த்தது தான் காரணம் என்று நினைத்து கோபியை மேடைக்கு அழைத்து பெருமைப்படுத்தி விட்டார். அத்துடன் பாக்யாவை உதாசீனப்படுத்தி கண்டு கொள்ளவில்லை. இருந்தாலும் பாக்கியா, இனியாவின் வெற்றியை கண்டு பூரித்துப் போய்விட்டார்.

அத்துடன் தன் மகள் டான்ஸ் ஸ்கூலில் சேராமலேயே வின் பண்ணி காட்டியிருக்கிறார் என்று எழிலிடம் பெருமையாக பேசுகிறார். ஆனால் இனியா மேடையில் தன்னுடைய டான்ஸ் மாஸ்டரை அறிமுகப்படுத்தும் விதமாக கோபி சேர்த்து விட்ட மாஸ்டரை மேடைக்கு அழைத்து விட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாக்கியா அப்படியே அதிர்ச்சியாகி எதுவும் பேச முடியாமல் வெளியே போய்விட்டார்.

பாக்கியா ஃபீல் பண்ணுகிறார் என்று நினைத்து பின்னாடியே எழிலும் போய் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லுகிறார். அப்பொழுது கோபி உள்ளே புகுந்து பாக்யாவை சீண்டும் விதமாக பிள்ளைகள் எப்போதுமே என்னோட பக்கம்தான் வருவார்கள். மூன்று பிள்ளைகளையும் மலை போல் நம்பிக்கொண்டு இருக்கும் உனக்கு இனி அடுத்தடுத்து ஏமாற்றம்தான் வரப்போகிறது என்று தெனாவெட்டாக சவால் விடுகிறார்.

இதை பார்த்த எழில், என்ன நம்பிக்கையிலே என்னையும் சேர்த்து சொல்லுகிறீர்கள். இனியா வேண்டுமென்றால் உங்களை அப்பாவாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் நாங்கள் எப்பொழுதும் உங்களை ஒரு விரோதியாக தான் நினைக்கிறோம் என்று சொல்கிறார். உடனே கோபி, எழிலுக்கு உதவி செய்ததை மனதில் வைத்துக் கொண்டு நீயும் என் பக்கம் தான் சாய்வாய் என்று சொல்லி பேசுகிறார்.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த இனியாவிடம் பாக்கியா நான்தான் உன்னை டான்ஸ் கிளாஸில் சேர்க்கவில்லை. நீ உடனே உங்க அப்பாவுக்கு போன் பண்ணி டான்ஸ் கிளாஸ்ல சேர்க்க சொன்னியா என்று கேட்கிறார். உடனே இனியா நான் எதுவும் சொல்லவில்லை. அப்பாவாகத்தான் என்னிடம் கேட்டு என்னை அங்க சேர்த்தாங்க என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் பாக்கியா திட்ட ஆரம்பிக்கும் பொழுது செழியன் வந்து இனியாவுக்கு சப்போர்ட்டாக பேசி மாடிக்கு கூட்டி போயிருக்கிறார். இதனால் பாக்யா, இனியாவை நினைத்து கவலைப்படுகிறார். உடனே ஜெனி, மாமியாரின் மனநிலை மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். அந்த வகையில் அமிர்தா, ஈஸ்வரி, பாக்கியா மற்றும் ஜெனி அனைவரும் சேர்ந்து ஒரு நாள் வெளியே போகலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.

அதன்படி மாமியாரின் சந்தோஷத்திற்காக ஜெனி, அமிர்தா, பாக்கியா மற்றும் ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு பிடிச்ச விஷயங்களை செய்வதற்கு கூட்டிட்டு போயி சந்தோஷப்படுத்தி மகிழ் வைக்கிறார். பசங்க சரியில்ல என்றாலும் வீட்டிற்கு வந்த மருமகள் மாமியாரின் நிலைமை புரிந்துகொண்டு ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது.

- Advertisement -

Trending News