செழியனின் வீக்னஸ் பாயிண்டை யூஸ் பண்ணும் கோபி.. பாக்யாவிற்கு அடுத்தடுத்து வரவிருக்கும் பிரச்சினைகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா நெனச்சபடி ஹோட்டலில் மாமனாரின் புகைப்படத்தை வைத்து மௌன அஞ்சலி செலுத்தி ஆசீர்வாதம் வாங்கி விட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோபி, தான் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் என்னுடைய அப்பா தான். எனக்கு அவர் ஒரு சிறந்த அப்பாவாக இருந்ததில்லை.

ஆனால் நான் என் பசங்களுக்கு ஒரு சிறந்த அப்பாவாக அனைத்து கடமைகளையும் சரிவர செய்து வருகிறேன் என்று சொல்லி ஒரு சிறந்த அப்பாவாக பேசி விட்டார். இது எல்லாம் பார்த்து கடுப்பான பாக்கியா, நீங்கள் ஒரு சிறந்த அப்பா என்று சொன்னால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பதிலடி கொடுத்து விட்டார். பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழில், அமிர்தா மற்றும் நிலா பாப்பா பாக்யாவிடம் சொல்லி கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

செழியன் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி பாக்கியாவிற்கு எதிராக திருப்பும் கோபி

அத்துடன் தனியாக வீடு பார்த்து விட்டோம் நீங்கள் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். இதனை தொடர்ந்து அந்த வீட்டிற்கு போய் பால் காய்ச்சும் விஷயமாக அமிர்தா அம்மா சில பொருட்களை வாங்க சொல்கிறார். ஆனால் அதற்குள் பாக்கியா செல்வியுடன் எல்லா பொருட்களையும் வாங்கிட்டு வந்து எழில் வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறார்.

பிறகு அனைவரும் சேர்ந்து அந்த வீட்டிற்கு பால் காய்ச்சு முடித்து விட்டார்கள். அடுத்ததாக பாக்யாவிடம் அமிர்தா அம்மா நீங்கள் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்து எழிலை தனியாக அனுப்பி விட்டீர்கள் எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா அந்த வீட்டில் எழில் இருந்தால் இலட்சியத்தில் வெற்றி பெற முடியாது. தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும்.

அதனால் தனியாக இருந்தால்தான் அவனால் வெற்றி பெற முடியும். கூடிய சீக்கிரத்தில் எழில் வெற்றி பெற்று ஜெயித்த கையுடன் அந்த வீட்டிற்கு வருவான் என்று நம்பிக்கையுடன் பாக்கியா பேசுகிறார். இதை வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த எழில் ஆனந்தத்தில் கண்ணீர் வடித்து அம்மாக்காகவே நம் இலட்சியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து செழியன் ஆபீஸ் விஷயமாக டென்ஷனாக பேசிக் கொண்டிருக்கிறார். அங்கே ஜெனி வந்ததும் செழியன் ஃபோனை கட் பண்ணி விடுகிறார். உடனே என்ன ஆச்சு செழியன் ஏன் டென்ஷனாக இருக்கிறாய், நான் வந்ததும் பேச்சை நிப்பாட்டி விட்டாய் என்ன என்று கேட்கிறார். அதற்கு செழியன் ஆபீசில் ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. திடீரென்று வேலை பார்ப்பவர்களை தூக்கி விடுகிறார்கள்.

இதனால் எனக்கு பயமாக இருக்கிறது எங்கே என்னுடைய வேலை போய் விடுமோ என்ற பயம் தான் எனக்கு மிகப்பெரிய டென்ஷனை கொடுக்கிறது என்று சொல்கிறார். அதற்கு ஆறுதல் சொல்லும் விதமாக ஜெனி உனக்கு அந்த பிரச்சனையும் வராது. நீ எப்போதும் போல வேலையை பாரு என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார். ஏற்கனவே இந்த விஷயத்தை செழியன், கோபியிடம் சொல்லி இருக்கிறார்.

தற்போது கோபி, பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்று இருக்கும் பட்சத்தில் செழியன் வேலை பார்ப்பதில் பிரச்சனை என்று தெரிந்ததும் இதை வைத்து கேம் ஆட வாய்ப்பு இருக்கிறது. அதாவது இப்பொழுது ஜெனி மாசமாக இருக்கும் பொழுது உனக்கு வேலையும் போய் விட்டது என்றால் உன் குடும்பத்தை சமாளிப்பது ரொம்பவே கஷ்டம். அதனால் உன்னுடைய தேவைகளை பார்த்து உனக்கு பாதுகாப்பாக பணத்தை சேர்த்து வை என்று பல கெட்டதுகளை சொல்லி செழியன் மனசை மாற்ற வாய்ப்பு இருக்கிறது.

அதனால் செழியனும், ஒரு வேலை கோபி பேச்சைக் கேட்டால் வீட்டிற்கு பணம் கொடுப்பதும் தேவைகளை பூர்த்தி செய்வதையும் நிப்பாட்டி விடவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படியே தொடர்ந்து பாக்யாவிற்கு அடுத்தடுத்த பிரச்சினைகளை கொடுத்து நிம்மதி இல்லாமல் தவிக்க விட போகிறார் கோபி.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவம்

- Advertisement -spot_img

Trending News