Connect with us
Cinemapettai

Cinemapettai

radhika-baakiya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மரணப்படுக்கையில் கோபி.. பதறிப்போய் ஹாஸ்பிடலுக்கு சென்ற மனைவிகள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக கூட வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கல்லூரி காதலியை திருமணம் செய்து கொள்ள கோபி போட்ட திட்டமெல்லாம் தற்போது சுக்கு நூறாகி விட்டது. கோபியின் மனைவி பாக்யா என்பது தெரிந்த ராதிகா கோபியை அடியோடு வெறுத்து அவனை விட்டு மும்பை செல்ல தயாராகி விட்டாள். இதை அறிந்த கோபி, ராதிகாவை எப்படியாவது சமாதானப்படுத்தி சென்னையிலேயே இருக்க வைக்க வேண்டும் என நினைக்கிறான்.

இருப்பினும் ராதிகா அவனுடைய பேச்சு துளி கூட கேட்காமல் ‘இனி என்னுடைய முகத்திலேயே முழிக்காதே’ என திட்டி விரட்டி அடிக்கிறார். இதனால் டென்ஷனான கோபி தன்னுடைய வீட்டிற்கு கோபத்துடன் காரை எடுத்துக் கொண்டு செல்கிறான். இது ஒரு புறமிருக்க ராஜேஷ், கோபிக்கும் குடும்பத்தினரை சந்தித்து கோபிக்கும் தம்முடைய மனைவியுடன் தகாத உறவு இருப்பதை தெரிவிக்கிறான்.

இதனால் அதிர்ச்சியான கோபியின் அம்மா மற்றும் கோபியின் மகள் இருவரும் கலக்கம் அடைகின்றனர். அதிலும் ராஜேஷ், ‘இந்த விஷயம் கோபியின் அப்பா மற்றும் எழில் இருவருக்கும் ஏற்கனவே தெரியும். வேண்டுமானால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்’ என எழில் மற்றும் கோபியின் அப்பா இருவரையும் தர்மசங்கடமான நிலைக்கு மாற்றி விட்டான். இருப்பினும் எழில் இந்த விசயத்தைப் பற்றி எதுவும் வாய் திறக்காமல் சமாளித்து விடுகிறான்.

ஆனால் கோபியின் அம்மாவிற்கு சந்தேகம் ஊர்ஜிதமானதால், காரை ஓட்டிக்கொண்டு வருகிற கோபியிடம் போன் செய்து ‘உடனே வீட்டுக்கு வா’ என கோபமாக பேசுகிறார். ஏற்கனவே கோபி ராதிகா வெறுப்பதை மனதில் நினைத்து கொண்டு காரை ஏடாகூடமாக ஓட்டிக் கொண்டிருப்பதுடன், தற்போது கோபியின் அம்மாவும் அழைப்பதால் டென்ஷனான கோபி லாரியில் மோதி விடுகிறார்.

இதனால் பலத்த காயமடைந்த கோபி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு அங்கு இருக்கும் செவிலியர்கள் இருவரும் தனித்தனியாக பாக்யாவிற்கும் ராதிகாவிற்க்கும் கோபியின் மனைவி என இருவருக்குமே, ‘கோபிக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்’ என்ற விஷயத்தை தெரிவிக்கின்றனர்.

உடனே பதறி அடித்துக்கொண்டு கோபியின் இரண்டு மனைவிகளும் கோபியை மருத்துவமனைக்கு பார்க்க ஓடோடி வருகின்றனர். இதன் பிறகு ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த பாக்யாவிற்கு ராதிகா தான் கோபியுடன் தொடர்பில் இருப்பவர் என தெரிந்து, இதன் பிறகு பெரிய பூகம்பமே பாக்கியலட்சுமி சீரியலில் வெடிக்கப் போகிறது.

Continue Reading
To Top