ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

வேலைக்காரியால் வீட்டுக்காரி இடம் மாட்டிக் கொள்ளும் கோபி அங்கிள்.. அட்ரா சக்க!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ஆனது விறுவிறுப்புடன் சென்று கொண்டிருப்பதால் டிஆர்பி-யில் டாப் இடத்தை பிடிப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களின் பிடித்தமான சீரியல் ஆகவும் மாறிவிட்டது.

தற்போது பாக்யா, ராதிகா திருமணம் செய்து கொள்ளும் நபர் யார் என்பதை பார்ப்பதற்காக செல்ல திட்டமிடுகிறாள். ஆனால் இதை ஏற்கனவே தெரிந்துகொண்ட கோபி, ராதிகாவை பாக்யா சந்திக்க விடாமல் கோபியின் அப்பா ராமமூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்கிறான்.

இதனால் ராதிகா பாக்யாவிற்கு கொடுத்த சமையல் ஆர்டரை, வீட்டு வேலைக்காரி செல்வி ஆசிரமத்திற்கு சென்று ராதிகாவிடம் ஒப்படைக்கிறாள். அங்கு பாக்யாவின் வீட்டுக்கு வேலைக்காரி செல்வி வருவதை அறிந்த கோபி, அவளையும் ராதிகாவை சந்திக்க விடாமல் ஆசிரம நிர்வாகியை உசுப்பிவிட்டு செல்வியை உள்ளே வரவிடாமல் அப்படியே வீட்டிற்கு திரும்ப அனுப்பி விடுகிறான்.

செல்வி, ராதிகா யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் எவ்வளவு முயற்சித்தாலும் கோபி வில்லத்தனமாக யோசித்து ராதிகாவை பார்க்க விடாமல் செய்கிறான்.

இருப்பினும் செல்விக்கு, ராதிகா திருமணம் செய்து கொள்ளும் நபர் கோபியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என சந்தேகம் இருக்கும் நிலையில், பாக்யாவிடம் அடிக்கடி இதைப் பற்றி பேசி திட்டு வாங்குவது வழக்கம் தான்.

ஆனால் செல்வி சொல்வது உண்மை என்பது பாக்யாவிற்கு தெரியவந்தால், பாக்யா நிலைகுலைந்து போய் விடுவாய். ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பது போல கோபி-ராதிகா இருவருக்கும் இடையே இருக்கும் தகாத உறவில் சீக்கிரம் பாக்யாவிற்கு தெரியத்தான் போகிறது.

- Advertisement -spot_img

Trending News