Connect with us
Cinemapettai

Cinemapettai

gobi sudhakar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உயிரை பணயம் வைத்து வேலை பார்த்தால் இப்படியா அசிங்கப்படுத்துவது.. கோபி,சுதாகரை வறுத்தெடுத்த ரசிகர்கள்!

ஒரு காலத்தில் சினிமாத்துறை மட்டுமே ஒரு நபரை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் மக்களிடம் ஈசியாக சென்று விடலாம். அந்த அளவிற்கு இணையதளம் வெகுவாக வளர்ந்து விட்டது. அதனை பயன்படுத்தி பலரும் தங்களது கருத்துக்களை இணையத்தில் வழியாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுகின்றனர்.

யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை தன்வசப்படுத்தி உள்ளவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்கள் முதலில் மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யூடியூப் சேனல் மூலம் மக்களிடம் பிரபலம் அடைந்தவர். பின்பு ஒரு சில காரணமாக இவர்கள் இருவரும் இணைந்து பரிதாபங்கள் எனும் சேனலை உருவாக்கி அதன் மூலம் தங்களது காமெடியான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் வீடியோக்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. ஆனால் இவர்கள் ட்ரெண்டிங்கில் எந்த பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அதனை மைய கருத்தாக வைத்து வீடியோ போடுவார்கள்.

madhan karthikeyan

madhan-karthikeyan

சமீபத்தில் நிவர் புயல் பற்றி ஒரு வீடியோவை காமெடியாக நடித்து அவர்களது யூடியூப் சேனலில் வெளியிட்டனர். அது பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து பாராட்டைப் பெற்றது. அதில் செய்தியாளர்கள் எப்படி பணியாற்றுவார்கள் என்பதை காமெடியாக சித்தரித்து வீடியோவை வெளியிட்டனர்.

gobi

gobi-sudhakar

அதற்கு செய்தி வாசிப்பாளர் ஒருவர் அவரது முகநூல் பக்கத்தில், நாங்கள் ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறோம், எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். ஆனால் நீங்கள் அதனை ஈசியாக எடுத்துக்கொண்டு காமெடியாக சித்தரித்து விடுகிறீர்கள்.

fans

fans

ஆனால் இந்த புயலால் பல குடும்பங்கள் எந்த அளவிற்கு பாதிப்பை சந்தித்தனர் என்பதும், அதனால் எவ்வளவு விளைவுகள் ஏற்பட்டது என்பதும் எங்களுக்கு தான் தெரியும். உங்களை பொருத்தவரை உங்கள் வீடியோக்களை மக்கள் பார்த்தால் போதும், பணம் சம்பாதித்தால் போதும் என்பது மட்டுமே மனதில் கொண்டு நீங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறீர்கள் என கோபி, சுதாகரை புதிய தலைமுறை கேமராமேனான கார்த்திகேயன் விமர்சித்தார்.

fans gopi

fans-gopi

அதற்கு ரசிகர்கள் ஒளிப்பதிவாளர் கார்த்திகேயனின் முகநூல் பக்கத்தில் உள்ள கமெண்ட் பாக்ஸில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் முதலில் கோபி சுதாகரன் வீடியோக்கு பாராட்டு தெரிவித்து வந்த நிலையில் தற்போது தங்களது எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top