புதன்கிழமை, நவம்பர் 6, 2024

மகளை வைத்து காய் நகர்த்திய கோபி அங்கிள்.. அசிங்கப்பட்ட ராதிகா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள பக்கா ப்ளான் போட்டு நடத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக குடித்துவிட்டு ராதிகாவிடம் பாக்யா தான் தன்னுடைய மனைவி என்ற உண்மையை உடைத்து விட்டான்.

இதனால் உயிர் தோழியின் வாழ்க்கையை கெடுத்து விடக்கூடாது என ராதிகா கோபியை அடியோடு வெறுக்கிறாள். இருப்பினும் கோபி, ராதிகா மற்றும் அவருடைய மகன் மயூ இருவரையும் பார்க்காமல் பேசாமல் இருக்க முடியவில்லை. இதனால் அடிக்கடி ராதிகா வீட்டிற்கு வந்து அவளை சமாதானப்படுத்த முயற்சித்தாலும் கோபி சொல்வதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்க ராதிகா அவனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி வீட்டை விட்டு விரட்டுகிறார்.

இதை ராதிகாவின் முதல் கணவர் ராஜேஷும் பார்த்துவிட, ராதிகா கோபி இருவரையும் பிரிக்க பல திட்டத்தைப் போட்டு செயல்படுத்தினாலும், இப்போது அவர்களாகவே பிரிந்து விட்டார்கள் என சந்தோசம் அடைகிறான். இந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் அனைவரும் வேடிக்கை பார்க்க அதில் ஒருவர், ‘முன்னாடி புருஷன் கூட தான் பிரச்சனை. இப்ப இவரு கூடயுமா’ என ராதிகாவை அசிங்க படுத்துகின்றனர். இதனால்

கோபத்தின் உச்சத்தில் இருந்த ராதிகாவிடம் மயூ, ‘தன்னைக் கோபி அங்கிள் ஸ்கூலி பார்க்க வந்ததாகவும், யாருக்காகவும் கோபி அங்கிள் நம்மை இருவரையும் விட்டுக்கொடுக்க மாட்டார்’ என்று சொன்னார் என்பதை ராதிகாவிடம் மயூ சொல்ல, கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ராதிகா மயூவை அடித்து விடுகிறார்.

இப்படி கோபி, ராதிகாவின் மகளிடம் பாசம் காட்டி தன் பக்கம் பேசும்படி வைத்ததை பார்த்த ராதிகா தன்னை போல தன்னுடைய மகளும் ஏமாந்து விடக்கூடாது என கதறுகிறார். இருப்பினும் இனி வரும் நாட்களில் ராதிகாவின் அம்மா ராதிகாவை, ‘கோபியை திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதனால் எந்தத் தப்பும் இல்லை’ உன்னுடைய மகளுக்காக உன்னுடைய முடிவை மாற்றிக் கொள். என அடிக்கடி சொல்லப்போகிறார்.

அதன் பிறகு பாக்யாவிடம் கோபி பிடிக்காத வாழ்க்கையை தான் இவ்வளவு நாள் வாழ்ந்ததால், அவரை திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றுத் தரவும் ராதிகா சுயநலமாக இனி வரும் நாட்களில் முடிவெடுக்க போகிறாள். அப்படி முடிவு எடுத்தால் பாக்யாவிற்கு வில்லியாக இந்த சீரியலில் ராதிகா ஒரு ரவுண்டு கட்ட தயாராக உள்ளார்.

- Advertisement -spot_img

Trending News