புதன்கிழமை, நவம்பர் 6, 2024

ராதிகாவை திருமணம் செய்து கொள்ள துணிந்த கோபி.. உசுப்பேற்றி விடும் அம்மா!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் துவங்கப்பட்ட போது போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தற்போது டாப் சீரியல்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த சீரியலில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அதிரடியான திருப்பம் அரங்கேறி உள்ளது.

ஏனென்றால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி கோபியிடம், ராதிகாவை பார்க்கவே கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஆனால் செய்து கொடுத்த சத்தியத்தை மறந்துவிட்டு ராதிகாவிற்கு திடீரென்று விபத்து ஏற்பட்டதும் முதல் நாளாக மருத்துவமனைக்கு கோபி சென்று ராதிகாவை பார்த்துள்ளார்.

அப்போது ராதிகாவின் அம்மா கோபியிடம், ‘உங்களுக்கு குடும்பம் இருக்கிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்’ என்று திட்டினார். அப்போது பேசிய கோபி, உங்களுக்கு என்னுடைய குடும்பம் தான் பிரச்சினை என்றால் அவர்களை விட்டுவிட்டு வர நான் தயார் என்றார்.

மேலும் ராதிகாவின் அம்மா, ‘இதை நீங்கள் எப்போதே செய்திருக்கலாமே’ என்று கோபியை உசுப்பேற்றி விட்டார். அதன்பிறகு ஆக்ரோஷமாக பேசிய கோபி, ‘ராதிகா மற்றும் மயூவிற்காக பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க தயார்.

அதன்பிறகு ராதிகா மற்றும் மயூவைப் பார்க்க நீங்கள் தடையாக இருக்க மாட்டீர்களே!. நிச்சயம் ராதிகாவை கல்யாணம் பண்ணிப்பேன்’ என்று கோபி அடித்துப் பேசினார். எனவே இனி பாக்கியலட்சுமி சீரியலில் பல்வேறு அதிரடி திருப்பம் வரிசையாக அரங்கேற உள்ளது.

இத்துடன் வரும் சனிக்கிழமை 6 மணி முதல் 9 மணி வரை மூன்று மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ள பாக்கியலட்சுமி சீரியல் சிறப்புத் தொகுப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News