வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஒரே வீட்டில் அம்மாவையும் ரெண்டு பொண்டாட்டியும் சமாளிக்கும் கோபி.. ஈஸ்வரியை அடக்கும் பாக்கியா ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி கூப்பிட்டதும் பாக்யா வீட்டிற்கு ராதிகா மயூவை கூட்டிட்டு வந்துவிடுகிறார். பாக்கியாவும், கோபியையும் திருத்த முடியாது மாமியாரையும் திருத்த முடியாது. அதே நேரத்தில் இப்படியே விட்டு விட்டால் கோபியை நாம் தலையில் கட்டி வைத்து விடுவாரோ என்ற பயத்தினால் ராதிகா வீட்டிற்குள் நுழைந்ததும் சந்தோஷப்பட்டு கொண்டார்.

ஆனாலும் கோபியின் குடும்பம் தங்குவதற்கு வாடகை கொடுக்க வேண்டும் என்று கரராக பேசி வாடகை வசூலித்து விட்டார். பிறகு மயூக்கும் சப்போர்ட்டாக பாக்யா இருக்கிறார். அத்துடன் ராதிகாவுடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பாக்கியா அவங்க குடும்பத்துக்கு எல்லாம் சமைத்துக் கொள்கிறார்.

அதே மாதிரி ராதிகா, கோபி மற்றும் மயூவுக்கு தேவையான விஷயங்களை கவனித்துக் கொள்கிறார். இதனால் பாக்கியா மற்றும் ராதிகாவிற்கு எந்தவித மன கஷ்டமும் இல்லாமல் ஒற்றுமையாகி விட்டார்கள். ஆனால் இவர்களுடைய ஒற்றுமையை பார்த்து ஈஸ்வரி வயிற்றெரிச்சல் பட ஆரம்பித்து விட்டார்.

அதிலும் பாக்யா வர வர நம்ம பேச்சைக் கேட்காமல் இஷ்டத்துக்கு நடந்து கொள்கிறார் என்ற கோபமும் ஈஸ்வரிக்கு இருக்கிறது. ராதிகாவை விட்டு கோபியை பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் இன்னும் அதிகமாகவே இரண்டு பேரும் ஒட்டிக் கொள்கிறார்களே என்ற கடுப்பும் ஈஸ்வரிக்கு இருக்கிறது.

ஆனால் ஈஸ்வரியை எப்படி சமாளிக்க வேண்டும் என்று கோபிக்கும் தெரிந்து விட்டது ராதிகாவும் புரிந்து கொண்டார். அதனால் தான் கோபியை கூட்டிட்டு வாக்கிங் போக வேண்டும் என்று நினைத்த ஈஸ்வரியை, நீங்கள் வீட்டில் இருந்துக்கோங்க நான் கோபியை கூட்டிட்டு போகிறேன் என்று ராதிகா நடைபயிற்சிக்கு போய்விடுகிறார்.

இது மட்டும் இல்லை இது ஆரம்பம்தான் என்பதற்கு ஏற்ப கோபியை செக்கப் கூட்டிட்டு போவதற்கு செழியன் மற்றும் ஈஸ்வரி தயாராக இருந்தார்கள். ஆனால் ராதிகா நானே என் வீட்டுக்காரரை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிய நிலையில் ஈஸ்வரி நானும் வருவேன் என்று விடாப்பிடியாக ஆஸ்பத்திரிக்கு போய்விட்டார்.

அங்கே போனதும் டாக்டரிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று ஈஸ்வரி பிடிவாதம் பிடிக்க, அவர் பேசுவது உங்களுக்கு என்ன புரியும் நானே போய் கேட்டுட்டு வருகிறேன் என்று கோபியை கூட்டிட்டு மருத்துவரை ராதிகா சந்தித்து விட்டார். இப்படி ஒவ்வொரு விஷயமும் ராதிகா செய்ததால் ஈஸ்வரி கோபமடைந்து விட்டார்.

உடனே கோபியிடம், ராதிகா என்னிடமிருந்து உன்னை பிரிக்க பிளான் பண்ணுகிறார். எனக்கு நீ தான் முக்கியம் என்னுடனே இருந்துவிடு என்று சென்டிமென்ட் ஆக பேச ஆரம்பிக்கிறார். ஆனால் உடனே இதை நிறுத்த வேண்டும் என்பதற்காக கோபி எனக்கு எந்தவிதமான அழுத்தமும் இருக்கக் கூடாது என்று டாக்டர் சொல்லி இருக்காங்க.

அப்படி எதையாவது பற்றி யோசித்தால் நெஞ்சுவலி திரும்ப வந்துவிடும் என்று டாக்டர் சொன்னதாக கோபி சொல்கிறார். உடனே பயந்து போன ஈஸ்வரி, அப்படியென்றால் நான் எதைப் பற்றியும் உன்னிடம் பேசவில்லை. நீனும் மனதில் எதையும் வச்சுக்காதே என்று ஆறுதல் படுத்தி விடுகிறார்.

எப்படியோ கோபி, அம்மாவை சமாளிக்கும் திறமையும் கற்றுக் கொண்டார், ராதிகாவையும் புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்கிறார். அது மட்டுமில்லாமல் பாக்யாவை பகைத்துக் கொள்ளாமல் நைசாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்கிறார். ஆக மொத்தத்தில் கோபி சரியான மூளைக்காரராக மாறிவிட்டார்.

Trending News