வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பொண்டாட்டிக்கு ஊட்டிவிட்ட கோபி.. நேரில் பார்த்து அதிர்ச்சியான ராதிகா

விஜய் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர்தான் பாக்கியலட்சுமி. இத்தொடரில் பள்ளியில் இருந்து சேர்ந்து படித்த ராதிகா என்ற பெண்ணை கோபி காதலித்தார். கோபியின் காதலை ஏற்க மறுத்து, கோபிக்கு பாக்கியாவை திருமணம் செய்து வைக்கிறார் கோபியின் தந்தை.

கோபிக்கு நல்ல படித்த, வேலைக்குப் போகும் பெண் வேண்டும் என்ற ஆசை இருந்தது. பாக்கியா வீட்டு வேலைகள் செய்து, குடும்பத்தை பார்ப்பதால் பாக்யா மீது கோபிக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு இரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். கோபியின் மூத்த மகனான செழியனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கோபியின் காதலி ராதிகாவுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

ராதிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து விட்டார்கள். இதனால் கோபி தற்போது ராதிகாவுக்கு உதவியாக உள்ளார். கோபியும், ராதிகாவும் கடைக்கு சென்று ஒரு புடவை வாங்குகிறார்கள். கோபி புடவையை மறந்து காரிலே வைத்துவிடுகிறார். பாக்கியா தற்செயலாக புடவையைப் பார்த்து இந்தப் புடவை யாருக்கு என கோபி இடம் கேட்கிறாள்.

கோபி அந்த நேரத்தில் சமாளிப்பதற்காக உனக்காக தான் வாங்கினேன் என்கிறார். கோபி மறுநாள் அதே கடைக்கு சென்று அதே நிறத்தில் வேறு ஒரு புடவை வாங்கி ராதிகாவிடம் கொடுக்கிறார். அதை பார்த்த ராதிகா நேற்று வாங்கிய புடவை இது இல்லையே என்கிறார். கோபி நேற்று வாங்கிய புடவை இதுதான் என ராதிகாவை சமாளித்துவிடுகிறார்.

கோபி ராதிகாவுடன் பழகுவதும் கோபி அப்பாவிற்கு தெரியவந்ததால் ராதிகாவிடம் எப்போது கோபி பாக்யாவின் கணவன் என்று சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கோபியின் உறவினர் திருமண வரவேற்பிற்கு ராதிகாவும் வருகிறார். அங்கு கோபி வாங்கிக்கொடுத்த புடவையை அணிந்து பாக்கியா உடன் கோபி இருப்பதை ராதிகா பார்க்கிறாள்.

கோபி பாக்யாவிற்கு சாப்பாடு ஊட்டி விடுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பாக்கியா பின்புறம் திரும்பு நிற்பதால் இது பாக்கியா என ராதிகாவிற்கு தெரியவில்லை. கோபி மனைவியுடன் சந்தோஷமாக தான் உள்ளார். கோபி சொன்னதெல்லாம் பொய் என காரில் அழுதபடி ராதிகா வீட்டுக்குச் செல்கிறார். இதனால் இந்த வாரம் எபிசோடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும்.

gopi-cheating-radhika
gopi-cheating-radhika
- Advertisement -

Trending News