விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் சென்ற வாரம் பாக்யா ஒரு சமையல் ஆர்டரை பக்கத்து வீட்டு பெண்களின் உதவியுடன் வெற்றிகரமாக முடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதற்கு அவர் கேட்ட பணத்திற்கும் மேலாகவே சம்பளமும் பெற்றார்.
தற்போது இந்த வாரம் அந்த பணத்தை எடுக்க பேங்கிற்கு செல்லும் பாக்யா தன்னுடைய பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். சமையலில் உதவி செய்த பெண்கள் அனைவரும் பணத்தை தருமாறு பாக்யாவின் வீட்டிற்கு வந்து கூச்சலிடுகின்றனர்.
அவர்களிடம் இரண்டு நாட்களில் பணத்தை கொடுத்து விடுவதாக பாக்யாவின் மகன் எழில் சமாளித்து அனுப்புகிறார். பணம் திருட்டு போனதை அறிந்த பாக்யாவின் கணவரான கோபி கோபத்துடன் பேச, எழில் தான் பணத்துடன் வந்து விடுவதாக கூறிச் செல்கிறார்.
இதனால் பாக்யாவின் மேல் குடும்பத்தினர் அனைவரும் கோபமாக உள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கோபி இந்த பிரச்சனையால் பாக்கியாவை வீட்டை விட்டு போ என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்.
அப்போது ஓடிவந்து பாக்கியாவை தாங்கி பிடித்த எழில், அம்மா உன் பணம் கிடைத்துவிட்டது என்று கூறி பணத்தை தருகிறார். இதைக்கண்ட பாக்யா மகிழ்ச்சியுடன் மகனைக் கட்டிக் கொள்கிறார்.