Tamil Cinema News | சினிமா செய்திகள்
2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்!
2018ல் ரசிகர்களால் அதிகம் கூகுளில் தேடப்பட்ட படம் ROBOT 2.0!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் டூ பாயிண்ட் ஓ. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வெளியாகி ரசிகர்களின் நல்லதொரு வரவேற்பை பெற்று இப்பொழுதும் பல திரையரங்குகளை ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. இப்படம் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிக பிரமாண்டமாக தயாரித்தனர்.

rajini2.o
முதன்முதலில் தமிழ் சினிமாவில் 3D-கேமராவால் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும். இப்படத்தில் அக்ஷய் குமார் மற்றும் ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் விஷுவல் எஃபெக்ட் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வந்த பாடல்கள் வெற்றி பெற்றன. இப்படம் உலகம் முழுவதும் 10000 திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் தற்போது வரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் பேட்ட. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கூகுளின் தேடலில் அதிகம் தேடப்பட்ட படங்களில் தமிழ் படமான ROBOT 2.o பிடித்துள்ளது.
