fbpx
Connect with us

Cinemapettai

இனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை

sundar-pichai-youtube

India | இந்தியா

இனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை

அனைவரும் பயன்படுத்தக்கூடிய யுடியூப் இணையதளத்தில் வெறுப்புணர்வை தூண்டக்கூடிய வீடியோக்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. அதற்கான நடவடிக்கை தற்போது கூகுள் நிறுவனம் எடுத்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இது பற்றி கூறுகையில், “சமீபகாலமாக இணையதளத்தை பலரும் பலவிதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். நற்செய்திகளை பதிவிடுவது மற்றும் தேவையற்ற செய்திகளை பதிவிடுவது போன்ற செயல்களிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பலரும் யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருவதாகவும், அதற்கான நடவடிக்கை தற்போது எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அதாவது அமெரிக்காவின் வாஷிங்டனில் பேசியவர் கடந்த 3 மாதங்களில் மட்டும் 90 லட்சத்திற்கும் மேலான வெறுப்புணர்வை தூண்டும் வீடியோக்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் அனைவரும் பயன்படுத்தக்கூடிய இணையதளத்தில் மதம், மொழி, இனம், நாடு உள்ளிட்ட பிரிவுகளில் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பல பதிவுகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறினார்.

தற்போது ஊழியர்கள் வைத்தும் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், துணை நிறுவனமான யூட்யூப்பில் வரும் வீடியோவையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top