google

தினம் தினம் கூகுள் தனது இணையத்தின் மூலம் பல வசதிகளை பயனாளர்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே வருகிறது. நேற்று அதுபோல் கூகுள் அறிமுகம் செய்த புதிய செயலிதான் பண பரிவர்த்தனைக்கான கூகுள் டெஸ் (Google Tez)

இந்த செயலியை நேற்று அருண் ஜெட்லி அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் கூகுள் PayTM, PhonePe வரிசையில் இணைந்துள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் வங்கியிலிருந்து நேரடியாக நீங்கள் பணபரிவர்த்தனை செய்யலாம்.
இது பிரத்யேகமாக இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட செயலி. எனவே இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு உடனடி பணப்பரிவர்த்தனை இதன் மூலம் செய்துகொள்ளலாம்.

அதிகம் படித்தவை:  மைக்ரோசாப்ட் ஓனருக்கே இந்த நிலைமையா?

இதன் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தை வங்கி மூலமோ அல்லது அருகாமையில் டெஸ் வசதி கொண்ட கடைகளிலோ பெற்றுக்கொள்ளலாம்.

NPCI’s (National Payments Corporation of India) Unified Payments Interface (UPI) மூலம் செயல்படும் இந்த செயலி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

அதிகம் படித்தவை:  பயனுள்ள 5 ஆண்டிராய்டு ஆப்கள்! டெக்பேட்டை

இன்னும் என்ன யோசனை உடனே தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.

ஆண்டிராய்டு செயலி: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user

ஆப்பிள் செயலி:
https://itunes.apple.com/in/app/tez-a-new-payments-app-by-google/id1193357041?mt=8

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பணப்பரிவர்த்தனைதான் நமக்கு தற்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. நன்றி கூகுள்.